இனி ம்யூசிக்கலி ஆப்க்கு பதிலாக டிக்டாக் ஆப்…!

HIGHLIGHTS

ம்யூசிக்கலி ஆப் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பலரும் அடடா இப்படி ஆகி போச்சேன்னு நினைச்சிருப்பாங்க ஆனால் இனி அது பெயரை மாற்றி டிக்டாக் என்ற சேவைக்கு மாற்றப்படுகின்றனர்.

இனி  ம்யூசிக்கலி  ஆப்க்கு  பதிலாக டிக்டாக் ஆப்…!

பெரும்பாலும்  மக்கள்  இந்த ம்யூசிக்காலி  பற்றி கேள்வி  பட்டு இருப்பீர்கள் முதல டப்மேஷ்குனு  டப் மேஷ்  னு ஒரு ஆப் இருந்தது ஆனா இப்பொழுதோ  டப் மேஷ் ந மூசிகளி தான், இந்த ம்யூசிக்கலி  ஆப் இளைஞர் மட்டும் இல்லமல் பெரியவர்களும் இந்த ஆப் யூஸ் பண்ணுறாங்க அது இதனுடன் இந்த ஆப்  இளைஞர்கள் மத்தியில்  தான் அதிக பிரபலமாக இருந்து வருகிறது  

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

https://static.digit.in/default/13d7c35fce8af72016f2ef004d5a6df0fc9ae54d.jpeg

ம்யூசிக்கலி  ஆப் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பலரும் அடடா இப்படி ஆகி போச்சேன்னு  நினைச்சிருப்பாங்க ஆனால் இனி  அது பெயரை மாற்றி  டிக்டாக் என்ற சேவைக்கு மாற்றப்படுகின்றனர். டிக்டாக் ஆப் மியூசிக்கல்.லி போன்றே சிறிய அளவிலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் ஆப் தான். 

சீனாவை சேர்ந்த இன்டர்நெட் நிறுவனமான பைட் டான்ஸ் மியூசிக்கல்.லி ஆப்  கடந்த ஆண்டு நவம்பரில் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று மியூசிக்கல்.லி ஆப் பயனர்கள், டேட்டாக்கள் மற்றும் பின்தொடர்வோர் புதிய டிக்டாக் ஆப்க்கு மாற்றப்படுவர்.

https://static.digit.in/default/7a7cf1b9c6c2203d4f42dd97b77c98e6af1a7048.jpeg

பைட் டான்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி டிக்டாக் ஆப் உலகம் முழுக்க சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூன் மாதத்தில் மியூசிக்கல்.லி தனது லைவ் ஆப் ஆன லைவ்.லி ஆப் மூடுவதாக அறிவித்து பயனர்களை சீட்டா மொபைலின் லைவ்மி ஆப்க்கு மாற அறிவுறுத்தியது.

மியூசிக்கல்.லி ஆப்யில் பயனர்கள் தங்களது முக பாவனைகளை வீடியோவாக பதிவு செய்து, அவற்றின் பின்னணியில் பாடல்கள் அல்லது ஆடியோ போன்றவற்றை சேர்த்து, அவற்றை பகிர்ந்து கொள்ள வழி செய்தது. அந்த வகையில் புதிய டிக்டாக் செயலியில் பயனர்களுக்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகிறது. 

அதன்படி ரியாக்ஷன் எனும் அம்சம் பயனர்கள் தங்களது நண்பர்களின் பதிவுகளுக்கு தங்களது கருத்துக்களை ஜெஸ்ட்யூர் ஃபில்ட்டர் வடிவில் சேர்க்க முடியும். இத்துடன் ஃபன்-ஹவுஸ் மிரர் கேமரா எஃபெக்ட்கள், கிரீன்ஸ்கிரீன் போன்ற எஃபெக்ட்கள் வழங்கப்படுகின்றன. 

புதிய டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்ய விரும்புவோர் அதன் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யலாம். ஏற்கனவே மியூசிக்கல்.லி செயலியை பயன்படுத்துவோருக்கு ஏற்கனவே இந்த செயலி டிக்டாக் என அப்டேட் செய்யப்பட்டு இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo