இன்ஸ்டாகிராமில் அதிரடி: இனி இந்த ஆப் யில் இது இயங்காது.

HIGHLIGHTS

இன்ஸ்டாகிராம், தற்போது பெரிய அளவில் குறுகிய வீடியோ தளமாக மாறியுள்ளது

தற்போது இன்ஸ்டாகிராம் ஐஜிடிவி செயலியை மூடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்ஸ்டாகிராம் நிறுவனம் வீடியோக்களை அடிப்படியாக கொண்டு ஐஜிடிவி சேவையை கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

போட்டோ ஷேரிங் பிளாட்ஃபார்ம் என்ற அளவில் தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம், தற்போது பெரிய அளவில் குறுகிய வீடியோ தளமாக மாறியுள்ளது. இன்ஸ்டாகிராமின் முழு கவனமும் இப்போது அதன் குறுகிய வீடியோ ரீல்களில் உள்ளது. தற்போது இன்ஸ்டாகிராம் ஐஜிடிவி செயலியை மூடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்ஸ்டாகிராம் நிறுவனம் வீடியோக்களை அடிப்படியாக கொண்டு ஐஜிடிவி சேவையை கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து அந்த சேவையை நிறுத்தி, ஐஜிடிவியை தனி செயலியாக மாற்றியது. இந்நிலையில் தற்போது ஐஜிடிவி சேவையை முழுவதுமாக நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

ஐஜிடிவியில் வழங்கப்பட்டு வந்த அனைத்து அம்சங்களும், வீடியோ சேவைகளும் இனி இன்ஸ்டாகிராம் செயலியிலேயே வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது உள்ள இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோக்களில் விளம்பரங்கள் இடம்பெறும் வகையிலும் இன்ஸ்டாகிராம் மாற்றம் செய்து வருகிறது. இதன்மூலம் வீடியோ கிரியேட்டர்கள் ரீல்ஸ் மூலம் வருமானமும் பெறலாம் என கூறியுள்ளது.

இணையவாசிகள் தற்போது அதிக அளவில் வீடியோக்களை பார்ப்பதிலேயே நேரம் செலவிட்டு வருவதால், தனியாக இயங்கும் ஐஜிடிவி சேவையை நிறுத்தி, இன்ஸ்டாகிராமில் உள்ள வீடியோ அம்சத்தை மேம்படுத்தும் வேலையில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :