இன்ஸ்டாகிராமில் பிழை கண்டறிந்த தமிழ் நாட்டு இளைஞன்.

இன்ஸ்டாகிராமில் பிழை  கண்டறிந்த  தமிழ் நாட்டு இளைஞன்.

chennaiபிழையை கண்டறிந்த லக்‌ஷமன் முத்தையா ஜூலை மாதத்திலும் இன்ஸ்டா பிழையை கண்டறிந்திருந்தார். அப்போது அவருக்கு 30,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 21.6 லட்சம்) பரிசு அறிவிக்கப்பட்டது.இன்ஸ்டாகிராமில் பிழை கண்டறிந்த சென்னை வாலிபருக்கு 10000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 7.2 லட்சம்) பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

முத்தையா தற்சமயம் கண்டறிந்திருக்கும் பிழையும், கடந்த முறையை போன்றதாகும். கடந்த முறை இவர் கண்டறிந்த பிழையை கொண்டு எவர் வேண்டுமானாலும், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை தடையமின்றி ஹேக் செய்துவிடக்கூடிய சூழல் இருந்தது. எனினும், இந்த பிழை சரிசெய்யப்பட்டு விட்டது.

இதனை உறுதிப்படுத்திய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பாதுகாப்பு குழு 10,000 டாலர்கள் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது. முத்தையா கண்டறிந்திருக்கும் பிழையை கொண்டு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை மிக சுலபமாக ஹேக் செய்திட முடியும்.

இன்ஸ்டாகிராம் சர்வெரில் பாஸ்வேர்டு ரீசெட் குறியீடுகளை வழங்கும் முறையில் கோளாறு இருப்பதாகவும், இதை கொண்டு பல்வேறு பயனர்களுக்கான பாஸ்வேர்டு ரீசெட் குறியீடுகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என முத்தையா இம்முறை கண்டறிந்திருக்கிறார்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo