WhatsApp யில் வந்துவிட்டது AI ஸ்டிக்கர் அம்சம் இதை எப்படி பயன்படுத்துவது எப்படி?

WhatsApp யில் வந்துவிட்டது AI ஸ்டிக்கர் அம்சம் இதை எப்படி பயன்படுத்துவது எப்படி?

WhatsApp இனி வெறும் சேட் செயலி மட்டுமல்ல. கடந்த சில ஆண்டுகளில், அந்நிறுவனம் அதில் பல ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) மற்றும் க்ரிஎட்டர்கள் WhatsApp யில் சேர்த்துள்ளது, இது பயனர்கள் தங்கள் கான்வேர்செஷன் மேலும் சுவாரஸ்யமாக்க அனுமதிக்கிறது. இந்த அம்சங்களில் ஒன்றுதான் AI ஸ்டிக்கர்கள். இப்போது பயனர்கள் எந்தவொரு மூன்றாம் தரப்பு செயலியின் தேவையுமின்றி, வாட்ஸ்அப்பிற்குள்ளேயே நேரடியாகத் தங்களின் சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்கலாம். இதன் சிறப்பு என்னவென்றால், நீங்கள் ஒரு சிறிய உரைக் குறிப்பைத் தட்டச்சு செய்தால் மட்டும் போதும், அதிலிருந்து செயற்கை நுண்ணறிவு தானாகவே ஸ்டிக்கரை உருவாக்கிவிடும். உதாரணமாக, நீங்கள் “வேடிக்கையான பூனை”, “ரோபோ எமோஜி” அல்லது “அசத்தலான கார்ட்டூன் நாய்” போன்றவற்றைத் டைப் செய்தால், அதற்கேற்ப வாட்ஸ்அப் பல AI ஸ்டிக்கர்களை உருவாக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வாட்ஸ்அப்பில் AI ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி?

  • முதலில், வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
  • இப்போது ஏதேனும் ஒரு அரட்டை சாளரத்திற்குச் செல்லவும்
  • கீழே உள்ள எமோஜி ஐகானைத் தட்டவும்
  • பிறகு ஸ்டிக்கர்கள் பகுதியைத் திறக்கவும்.
  • இங்குள்ள “உருவாக்கு” என்ற உரையைத் தட்டவும்.
  • இப்போது நீங்கள் ‘Use AI’ பொத்தானைத் தட்ட வேண்டும்.
  • இங்கே, உங்களுக்கு எந்த வகையான ஸ்டிக்கர் வேண்டும் என்பதைக் குறிக்க உரைப்பெட்டியில் தட்டச்சு செய்யலாம். ஆர்டிபிசியல் ஈண்டேளிஜன்ஸ் உங்களுக்கு நான்கு அல்லது ஐந்து விருப்பங்களை வழங்கும்.

எழுதி AI ஸ்டிக்கரை உருவாக்குவது எப்படி?

  • டெக்ஸ்ட் பாக்ஸில் உங்களுக்கு விருப்பமான விளக்கத்தைத் தட்டச்சு செய்யவும்.
  • உதாரணம்: “Funny Cat Wearing Sunglasses”, “Happy Robot Dancing”, “Cute Dog Eating Pizza”
  • உரையைத் தட்டச்சு செய்த பிறகு, உருவாக்கு (Create) பொத்தானை அழுத்தவும்.
  • வாட்ஸ்அப் ஏஐ நொடிகளில் பல ஸ்டிக்கர் விருப்பங்களை உருவாக்கும்
  • நீங்கள் விரும்பும் ஸ்டிக்கரைத் தேர்ந்தெடுத்து அரட்டையில் அனுப்பலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile