ஃபேஸ்புக் F8 2018 முக்கிய அம்சங்கள்

ஃபேஸ்புக் F8 2018 முக்கிய அம்சங்கள்
HIGHLIGHTS

ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 2018 டெவலப்பர்கள் மாநாட்டின் முதல் நாளில் வெளியான முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.

ஃபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நேற்று (மே 1) துவங்கியது. இவ்விழாவில் ஃபேஸ்புக் சேவைகளில் சேர்க்கப்படும் புதிய அம்சங்கள் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

இதுமட்டுமின்றி ஃபேஸ்புக் சொந்தமாக வைத்திருக்கும் சமூக வலைத்தளங்களில் மக்களை புதிய வழிகளில் மக்களை ஒன்றிணைப்பது குறித்த அறிவிப்புகளும் இடம்பெற்றன. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கின் அனைத்து தளங்களில் வழங்கப்பட இருக்கும் புதிய வசதிகள் குறித்தும் அறிவிக்கப்பட்டன. 

அந்த வகையில் F8 2018 நிகழ்வின் முதல் நாள் முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஷேரிங் டூ ஸ்டோரீஸ்

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டோரீக்களை ஷேர் செய்ய புதிய வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. ஸ்பாட்டிஃபை போன்ற செயலிகளில் நீங்கள் விரும்பும் தகவல்களை ஷேர் பட்டன் மூலம் நேரடியாக பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இதனால் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் கணக்கில் லாக்-இன் (Login) செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

க்ரூப்ஸ் (Group)

புதிய க்ரூப்ஸ் டேப் உங்களது க்ரூப்களுக்கு நேவிகேட் செய்யும் பணியை எளிமையாக்குகிறது. இந்த ஆண்டின் பிற்பாதியில் புதிய க்ரூப்களை கண்டறிந்து, இணைந்து கொள்ள ஏதுவாக புதிய அம்சம் வழங்கப்பட இருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

க்ளியர் ஹிஸ்ட்ரி

இந்த அம்சம் பயன்படுத்தி பிரவுசிங் ஹி்ஸ்ட்ரியை நீக்க முடியும். உங்களின் ஃபேஸ்புக் தகவல்களை பயன்படுத்தும் வலைத்தளங்கள் மற்றும் செயலிகளை உங்களால் பார்க்க முடியும். இனி இந்த அம்சத்தை உங்களால் அழிக்க முடியும். இந்த அம்சம் குக்கீக்களை அழிப்பதை போன்றே வேலை செய்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo