Youtube உங்களுக்கு 2019 தேர்தல் முடிவை லைவாக வழங்க இருக்கிறது.

HIGHLIGHTS

இந்த லைவ் கட்சியில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் லைவாக செய்யப்படுகின்றன.

கூகுள் மற்றும் பிரசார் பாரதி ஜனநாயகத்தின் மிகப்பெரும் திருவிழாவினை மே 23 ஆம் தேதி கொண்டாட இருக்கின்றன.

Youtube உங்களுக்கு 2019 தேர்தல் முடிவை  லைவாக வழங்க இருக்கிறது.

பிரசார் பாரதி மற்றும் கூகுள் சேர்ந்து 2019 பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூப் தளத்தில் லிவாக ஒளிபரப்ப செய்ய இருக்கின்றன. இந்த லைவ் கட்சியில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் லைவாக செய்யப்படுகின்றன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்தியா முழுக்க யூடியூப் வெப்சைட்டை எங்கிருந்து இயக்கினாலும் வலைதள பக்கத்தின் முகப்பு பகுதியில் டி.டி. நியூஸ் வழங்கும் தேர்தல் முடிவுகள் இடம்பெறும். தேர்தல் முடிவுகள் யூடியூப் தளம் மற்றும் மொபைல் செயலி என இரண்டிலும் நேரலை செய்யப்படும் என பிரசார் பாரதியின் சஷி சேகர் வெம்பதி தெரிவித்தார். 

கூகுள் மற்றும் பிரசார் பாரதி ஜனநாயகத்தின் மிகப்பெரும் திருவிழாவினை மே 23 ஆம் தேதி கொண்டாட இருக்கின்றன. கொண்டாட்டத்தின் அங்கமாக 2019 பொது தேர்தல் முடிவுகளை யூடியூபில் லைவ் செய்ய இருப்பதாக பிரசார் பாரதி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கூகுள், செயலி மற்றும் வலைதளத்தில் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

யூடியூப் தளத்தில் முகப்பு பகுதியில் தோன்றும் இணைய ஆப்ஷனை க்ளிக் செய்ததும், டி.டி. நியூஸ் யூடியூப் சேனல் திறக்கும். இதுதவிர டி.டி. சேவை கிடைக்கும் 14 மற்ற மொழிகளில் லைவாக பார்க்க முடியும். 

இவ்வாறு செய்யும் போது வாக்குப்பதிவு எண்ணிக்கை சார்ந்த விவரங்களை வெவ்வேறு மொழிகளில் டிஜிட்டல் முறையில் வழங்க முடியும். இத்துடன் விவரங்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக இருக்கும். மேலும் கூகுள் மற்றும் பிரசார் பாரதி இணைந்து செயல்பட இருப்பது இதுவே முதல் முறை ஆகும் என சஷி சேகர் வெம்பதி தெரிவித்தார்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile