APPLE யின் மற்றொரு நிகழ்வு நவம்பர் 10 ஆரம்பம், என்ன அறிமுகமாகும் நிகழ்வில்?

HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனம் ‘One more thing’ விர்ச்சுவல் நிகழ்வு நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது

ஆப்பிள் நிகழ்வுகள் விர்ச்சுவல் முறையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் வல்லுநர் மிங் சி கியோ ஏஆர்எம் மேக் பிராசஸர் கொண்ட முதல் சாதனம் 13 இன்ச் மேக்புக் ப்ரோ என கணித்திருந்தார்.

ஆப்பிள் நிறுவனம் ‘One more thing’ விர்ச்சுவல் நிகழ்வு நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் சிலிகான் மேக் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கடந்த மாதங்களில் தொடர்ச்சியாக ஆப்பிள் நிகழ்வுகள் விர்ச்சுவல் முறையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆப்பிள் வல்லுநர் மிங் சி கியோ ஏஆர்எம் மேக் பிராசஸர் கொண்ட முதல் சாதனம் 13 இன்ச் மேக்புக் ப்ரோ என கணித்திருந்தார்.

அந்த வகையில் இந்த பிராசஸர் கொண்ட சாதனம் நீண்ட பேட்டரி பேக்கப், அதிக பாதுகாப்பு வழங்கும். மேலும் இதில் தரமான கிராபிக்ஸ் அனுபவத்தை வழங்கும் உயர் ரக ஜிபியு, நியூரன் என்ஜின் மற்றும் மெஷின் லேர்னிங் அக்செல்லரேட்டர்கள், வீடியோ, டிஸ்ப்ளே மற்றும் இமேஜ் பிராசஸிங் என்ஜின்களை கொண்டிருக்கும். 

ஆப்பிள் சிலிகான் பிராசஸர்கள் தலைசிறந்த செயல்திறன் கொண்டிருக்கும் என்றும் இதில் அதிநவீன தொழில்நுட்பங்கள், மேம்பட்ட பவர் மேனேஜ்மென்ட் வழங்கும் என ஆப்பிள் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :