Apple ஐபோன் கடைக்கு போக தவை இல்லை சரி செய்யலாம்.

HIGHLIGHTS

ஆப்பிள் முதன்முறையாக செல்ஃப் ரிபயர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்கள் iPhone அல்லது MacBook ஐ நீங்களே சரிசெய்யலாம்

இந்த திட்டம் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களுக்கு செயல்படுத்தப்பட இருக்கிறது.

ஆப்பிள் முதன்முறையாக செல்ஃப்  ரிபயர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சுய பழுதுபார்ப்பு திட்டத்தின் கீழ், நீங்கள் இப்போது அசல் ஆப்பிள் உதிரி பாகங்களை வாங்கலாம் மற்றும் உங்கள் iPhone அல்லது MacBook ஐ நீங்களே சரிசெய்யலாம். ஆப்பிள் நிறுவனம் பொதுமக்களுக்கு உதிரிபாகங்களை வழங்குவது இதுவே முதல் முறை.

ஆப்பிள் செல்ப் சர்வீஸ்

ஆப்பிள் சாதனங்களை சர்வீஸ் செண்டர் செல்லாமல் தாங்களாகவே சரிசெய்து கொள்ளலாம். இந்த திட்டம் ஆப்பிள் அதிகாரப்பூர்வ உதிரிபாகங்கள், டூல்கள், மேனுவல் உள்ளிட்டவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. முதற்கட்டமாக இந்த திட்டம் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களுக்கு செயல்படுத்தப்பட இருக்கிறது. 

முதலில் பயனர்களுக்கு ரிப்பேர் மேனுவல் வழங்கப்படும். இதனை வாசித்து சாதனத்தை சரி செய்யும் நம்பிக்கை பயனருக்கு ஏற்படும் பட்சத்தில், அவர்கள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ உதிரிபாகங்களை வாங்க முன்பதிவு செய்யலாம். சரி செய்த பின் பாழாகி போன உதிரிபாகங்களை மறுசுழற்சி செய்ய பயனர்கள் ஆப்பிளிடம் திரும்ப வழங்கலாம்.

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களின் டிஸ்ப்ளே, பேட்டரி மற்றும் கேமரா சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய வைக்க ஆப்பிள் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 200 தனித்தனி உதிரிபாகங்களை வாங்கிட முடியும். ஐபோனை தொடர்ந்து எம்1 மேக் மாடல்களை சரிசெய்யும் வசதியையும் ஆப்பிள் வழங்க இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :