தல அஜித்தின் ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக் அடுத்த மாதம் வெளியாகும்.

HIGHLIGHTS

வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார்

'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும்

இந்நிலையில், ஏகே 61 குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

மேலும், சமுத்திரக்கனி, வீரா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ஏகே 61 குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியாகும் எனவும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த நாளான அன்று டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட போனி கபூர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் வேலைகள் பெரும்பான்மையாக முடிந்து விட்டதை அடுத்து சமீபத்தில் அஜித் ஐரோப்பா நாடுகளில் சுற்றுப்பயணத்திற்காக சென்றிருந்தார். அப்போது முக்கிய சுற்றுலாத்தலங்களில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :