அட்லி இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் இடம் பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதேபோன்று விஜய் சேதுபதியும் படத்தில் இடம் பெறுவார் என கூறப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து அட்லி ஜவான் என்ற படத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் அட்லி மற்றும் ஷாருக்கானுக்கு நெருங்கிய நண்பராக இருக்கும் நடிகர் விஜய், ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம் பெறுவார் என கோலிவுட்டில் பேசப்படுகிறது. ஏறக்குறைய விஜய் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதேபோன்று விஜய் சேதுபதியும் முக்கிய தோற்றத்தில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜவான் படத்தில் நடிப்பதற்கு விஜய் எந்தவித சம்பளம் வாங்கவில்லை என்ற தகவலும் கோலிவுட்டில் பரவி வருகிறது.
விஜய் இடம்பெறும் காட்சிகள் செப்டம்பர் மாதம் சென்னையில் படமாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2012இல் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில், பிரபுதேவா இயக்கத்தில், ரவுடி ரத்தோர் என்ற திரைப்படம் வெளியானது. இதில் பிரபுதேவா கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரே ஒரு பாடல் காட்சியில் விஜய் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதற்கு தெலுங்கு மூல நட்சத்திரம் மகேஷ் பாபுவை படக்குழுவினர் அணுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.