விஜய்யின் தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

HIGHLIGHTS

தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விஜய் பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்டுள்ளது.

தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

ந்த திரைப்படத்தை . தெலுங்கு சினிமாவில் மோஸ்ட் வான்ட்டடாக இருக்கும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விஜய் பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சியின் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். தளபதி 66 என்ற ஒர்க்கிங் டைட்டிலில் இந்தப் படம் உருவாகி வந்தது.

தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, ஜெயசுதா,ஷாம், யோகிபாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.இந்த திரைப்படத்தை . தெலுங்கு சினிமாவில் மோஸ்ட் வான்ட்டடாக இருக்கும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் விஜய் படத்திற்கு நடன காட்சிகளை பிரபுதேவா வடிவமைக்கிறார். இந்த நிலையில், விஜய்யின் பிறந்த நாளையொட்டி, தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6.01-க்கு வெளியிடப்பட்டுள்ளது.

தளபதி 66 படத்திற்கு வாரிசு என்று பெயர் வைத்துள்ளார்கள். இதையடுத்து சோஷியல் மீடியாவில் #Varisu, #வாரிசு என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.

தொடர்ந்து ஆக்சன் படங்களில் விஜய் நடித்து வரும் நிலையில், தளபதி 66 படம் குடும்பக்கதை மற்றும் ஃபீல் குட் மூவியாக உருவாக்கப்படுகிறது.

பல்வேறு திரையுலக பிரபலங்கள் தளபதி 66 ஃபர்ஸ்ட் லுக்கை ஷேர் செய்து படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அடுத்ததாக இன்னொரு அப்டேட் இன்று நள்ளிரவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/actorvijay/status/1539224409721823232?ref_src=twsrc%5Etfw

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :