தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் டீசர் வெளியானது.

HIGHLIGHTS

தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படத்தின் (Vaathi Teaser) டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தனுஷ் பிறந்த நாளையொட்டி வாத்தி படத்தின் டீசர் வெளியாகியுள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவராக, ஆசிரியராக தனுஷ் கவனம் ஈர்த்துள்ளார்

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படத்தின் (Vaathi Teaser) டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கு மொழியில் சார் (Sir) என இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தனுஷ் பிறந்த நாளையொட்டி வாத்தி படத்தின் டீசர் வெளியாகியுள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரது 39வது பிறந்த நாளையொட்டி நேற்றிலிருந்து தொடர் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

இதில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவராக, ஆசிரியராக தனுஷ் கவனம் ஈர்த்துள்ளார். டீசரைப் பார்க்கும் போது வில்லன் கேரக்டரில் சமுத்திரக் கனி நடித்திருப்பதை யூகிக்க முடிகிறது.

நேற்று நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் டப் செய்யாமல் தனுஷ் நேரடியாக நடித்து வரும் வாத்தி படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள முன்னணி நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ‘படிப்புங்கிறது பிரசாதம் மாதிரி… குடுங்க. ஃபைவ் ஸ்டார் ஓட்டல் சாப்பாடு மாதிரி விற்காதீங்க…’ என்ற தனுஷ் பேசும் வசனத்துடன் டீசர் நிறைவடைகிறது.

இந்த டீசரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். டீசர் வெளியான குறைந்த நேரத்தில் அதிக லைக்குகளை குவித்துள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :