இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் மிகவும் அத்தியாவிச பொருளாக மாறியுள்ளது
ஸ்மார்ட்போன்கள் நமது அன்றாட வாழ்வில் ஒரு இன்றியமையாத அங்கமாகத் திகழ்கின்றன
உங்கள் போனில் வைரஸ் இருப்பது எப்படி கண்டு பிடிப்பது பார்க்கலாம் வாங்க.
How to remove from virus
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் மிகவும் அத்தியாவிச பொருளாக மாறியுள்ளது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள், இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் நமது அன்றாட வாழ்வில் ஒரு இன்றியமையாத அங்கமாகத் திகழ்கின்றன. அவை நமது தனிப்பட்ட தகவல்கள், எந்க் விவரங்கள் மற்றும் பரந்த டிஜிட்டல் உலகத்துடனான நமது தொடர்பைக் கொண்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இது அவற்றை மொபைல் டேட்டா ஸ்பேம், ஃபிஷிங் திட்டங்கள் மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு ஒரு பொக்கிஷமாக ஆக்குகிறது.
இன்றைய காலத்தில் சுமார் 7 மில்லியனுக்கும அதிகமான மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகிறார்கள், மேலும் அதில் பலர் தனக்கே தெரியாமல் பல ஆப்கள் டவுன்லோட் செய்வதன் மூலம் அவர்களுக்கே தெரியாமல் வைரஸ் போனுக்குள் வந்து விடுகிறது , அப்படி இருக்கும் சூழ்நிலையில் உங்கள் போன் அடிகடி சூடாக்குறது எனவே உங்கள் போனில் வைரஸ் இருப்பது எப்படி கண்டு பிடிப்பது பார்க்கலாம் வாங்க.
உங்கள் போனில் வைரஸ் இருப்பது எப்படி தெரிந்து கொள்வது ?
ஒரு போனில் வைரஸ் தொற்று உள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்கான மிக எளிய வழி, அதை மால்வேருக்காக ஸ்கேன் செய்வதாகும். மால்வேர்பைட்ஸைத் (Malwarebytes) திறந்து, மேல்வேர் சாப்ட்வேரை கண்டறிய ஸ்கேனரைப் பயன்படுத்தவும்.
உங்கள் போன் வைரஸ் ஸ்கேன் செய்து, இந்த அறிகுறிகளைச் சரிபார்க்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்: பேட்டரி மிக வேகமாகத் தீர்ந்துவிடுவது, போன் அதிக வெப்பமடைவது, விசித்திரமான பாப்-அப்கள் தோன்றுவது மற்றும் நீங்கள் டவுன்லோட் ஆப்களை கவனிக்கவும்.
How to remove from virus
புதிய ஆப் தோன்றினால் எச்சரிக்கை:- உங்கள் போனில் காரணமின்றி ஆப்கள் தோன்றுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இந்தச் ஆப்கள், மற்றொரு ஆப்களுடன் சேர்ந்தே வந்த மேல்வேர் சாப்ட்வேர், உங்களுக்குத் தெரிந்த ஒருவரால் இரகசியமாக இன்ஸ்டால் செய்யப்பட்டு ப்ரைவசி மீறும் டூள்ளக, அல்லது ஃபிஷிங் மேல்வேர் அட்டேக் விளைவாகவோ இருக்கலாம்.
Pop-ups Ads :-ஆட்வேர் போன்ற தேவையற்ற போப்-அப் , விளம்பரப் பணம் சம்பாதிப்பதற்காக உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்க்ரீனில் பாப்-அப் விளம்பரங்களைக் காட்டுகின்றன அதை நாம் தெரியாமல் க்ளிக் செய்தால் அதில் நமக்கே தெரியாமல் மேல்வேர் உண்டு பண்ணுகிறது.
பேட்டரி ட்ரைனிங்:– அனைத்து மொபைல் சாதனங்களின் பேட்டரிகளும் காலப்போக்கில் வேகமாகத் தீர்ந்தாலும், பேட்டரி அளவு வேகமாக குறைவதற்கு, ஒரு நிரல் தந்திரமாக வளங்களைப் பயன்படுத்துவதே காரணமாக இருக்கலாம்.
Slow load times :- மேல்வேர் ஆப்கள் உங்கள் போனில் ப்ரோசெசிங் பவர் ஸ்டோரேஜ் அதிகம் பயன்படுத்துவதால், அதன் வேகத்தைக் குறைத்துவிடும்.
ஹயர் டேட்டா யூசெஜ்:– சில வகை மேல்வேர் உங்கள் அனுமதியோ அல்லது அறிவோ இன்றி உங்கள் டேட்டாவை பயன்படுத்தக்கூடும். உதாரணமாக ஒரு ஸ்பை சாப்ட்வேர், அதை உருவாக்கியவருடன் தொடர்புகொள்வதற்காக உங்கள் டேட்டாவை பயன்படுத்தக்கூடும்.
சந்தேகதிர்கூரிய மெசேஜ் வரும்:-சில ட்ரோஜன்கள் போன்ற தீம்பொருள்கள் உங்கள் தொடர்புகள் பட்டியலை ஆராய்ந்து, அவர்களுக்கு ஃபிஷிங் ஈமெயில்களையும் குறுஞ்செய்திகளையும் அனுப்பக்கூடும். சில சமூக ஊடக தீம்பொருள்கள் உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் விசித்திரமான மெசெஜ்களால் திணறடிக்கவும் கூடும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.