உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் App உங்கள லொகேஷன் ட்ரேக் செய்வது, அதை எப்படி தடுப்பது எப்படி?

ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்க்கையின் ஒரு இன்றியமையாத அங்கமாகிவிட்டன, ஆனால் பலருக்குத் தெரியாத ஒரு சிக்கலும் அவற்றுடன் வருகிறது. பல மொபைல் App-கள், நீங்கள் அவற்றைப் பயன்படுத்தும்போது உங்கள் லொகேஷனை கண்காணிப்பது மட்டுமல்லாமல், பேக்ரவுண்டில் உங்கள் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிக்கின்றன. இது நிறுவனங்களுக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், பேட்டரி மற்றும் மொபைல் டேட்டா பயன்பாட்டையும் அதிகரிக்கக்கூடும். அதிர்ஷ்டவசமாக, சில எளிய அமைப்புகளை மாற்றுவதன் மூலம், இந்த கண்காணிப்பை ஒரு சில நிமிடங்களிலேயே நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

ஆப்கள் உங்கள் லொகேஷன் ட்ரேக் செய்கிறதா ?

சில ஆப்களுக்கு இருப்பிட அணுகல் தேவைப்படுகிறது. உதாரணமாக, வரைபடச் செயலிகள் வழிகளைக் காட்டவும், வாடகைக் கார் முன்பதிவுச் செயலிகள் பயணிகளை ஏற்றிச்செல்லும் இடங்களைக் கண்டறியவும், வானிலைச் செயலிகள் இருப்பிடத் தகவலையும் கோருகின்றன.

App location track

இருப்பினும், பல சோசியல் மீடியா , ஷாப்பிங் மற்றும் விளம்பர அடிப்படையிலான ஆப்களும் லொகேஷன் டேட்டாவை சேகரிக்கின்றன. இது, உங்கள் பயணப் பழக்கங்கள், விருப்பமான இடங்கள் மற்றும் ஷாப்பிங் நடத்தை ஆகியவற்றை நிறுவனங்கள் பகுப்பாய்வு செய்ய அனுமதிக்கிறது. பின்னர் இந்தத் தகவல், இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

ஆப்கள் உங்கள் லொகேஷனை ட்ரேக் செய்வதில் எப்படி தடுப்பது ?

ஸ்டேப் 1:-ஆண்ட்ரோய்ட் போனாக இருந்தால் செட்டிங் திறந்து லொகேஷன் பகுதிக்கு செல்லவும் iPhone என்றால் செட்டிங் சென்று ப்ரைவசி மற்றும் செக்யூரிட்டி செல்லவும் அதன் பிறகு லொகேஷன் சர்விஸ்க்கு செல்லவும்.

App location track

ஸ்டேப் 2:- இப்பொழுது நீங்கள் எந்த எந்த ஆப் எல்லாம் லொகேஷன் கண்காணிக்கிறது என்ற லிஸ்ட் வரும் ஒவ்வொரு ஆப் பர்மிஷன் குறிப்பிடப்பட்டிருக்கும் உதாரணமாக அதில் Android ஆக இருந்தால் “Allowed all the time” அல்லது (iPhone) என்றால் “Always” எனவும் இருக்கும்.

App location

ஸ்டேப் 3 :- இப்பொழுது நீங்கள் எந்த எந்த ஆப்க்கு பர்மிஷன் கொடுக்க நினைகுறிர்கள் மற்றும் எந்த ஆப்க்கு லிமிடெட் ஆப்ஷன் தேர்ந்து எடுக்கவும் அதில்

  • Allow all the time
  • Allow only while using the app
  • Ask every time
  • Don’t allow / Never

மேலும் இதில் நீங்கள் தேர்ந்து எடுக்கும்படி லொகேஷனை தேர்ந்து எடுக்கலாம், மேலும் அதன்படி லொகேஷன் தேர்வு செய்யலாம்.

ஸ்டேப் 4 :-ட்ரேகிங் ஏரியா லிமிட் அதாவது ஒரு சில ஆப்களுக்கு லொகேஷன் அவசியம் தேவைப்படும் அதில் முக்கியமாக (ஆப் அல்லது டெலிவரி ஆப்கள்) போன்றவைக்கு முக்கியமாக தேவைப்படும் உங்கள் துல்லியமான லொகேஷனை பதிலாக ஒரு தோராயமான பகுதிக்குள் மட்டுமே அவர்களைக் கட்டுப்படுத்த, ‘துல்லியமான லொகேஷனை ‘ (Precise Location) என்பதை முடக்கவும்.

இதையும் படிங்க:உங்கள் PAN கார்டை உங்களுக்கே தெரியாமல் ஒருவர் பயன்படுத்தினால் அதை எப்படி கண்டுபிடிப்பது?

ஸ்டேப் 5:- ஒவ்வொரு வாரமும் நீங்கள் எந்த எந்த லொகேஷனுக்கு பர்மிஷன் கொடுத்துள்ளிர்கள் என்று கண்காணிப்பது அவசியமாகும், மேலும் உங்கள் ஆப்களுக்கு எப்பொழுதெல்லாம் ஆப் லொகேஷன் தேவைப்பட்டால் அப்பொழுது மட்டும் அக்சஸ் தேவைப்படும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :