வீட்டிலிருந்த படி இலவசமாக Aadhaar கார்டில் Email id அப்டேட் எப்படி செய்வது பாருங்க ?

உங்கள் Aadhaar கார்டுடன் இன்னும் Email Id லிங்க் செய்யாமல் இருந்தாலோ அல்லது புதிய ஈமெயில் id மாற்ற நினைத்தாளோ, இது ஒரு சிறந்த வழி ஆகும். இந்திய தனி அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் கார்டில் ஈமெயில் அப்டேட்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக்கியுள்ளது. இந்த நேரத்தில் பயனர்கள் எந்த வித கூடுதல் கட்டணமின்றி ஈமெயில் id மாற்ற முடியும் இதனுடன் ஏதோ ஒரு காரனத்தால் உங்கள் போனில் நெட்வொர்க் வராத பொது உங்கள் ஈமெயில் OTP வெரிபிகேஷன் மூலம் உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும் மேலும் இந்த சேவை எது வரை கிடைக்கும் மற்றும் இதை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

இலவசமாக ஆதருடன் ஈமெயில் கனெக்ட் செய்யலாம்.

UIDAI, ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை ஆதார் அக்கவுண்டில் ஈமெயில் முகவரிகளைப் அப்டேட் செய்வதற்க்கான கட்டணத்தை ரத்து செய்துள்ளது. பொதுவாக இந்தச் சேவைக்குக் கட்டணம் வசூலிக்கப்படும், ஆனால் தற்போது, ​​பயனர்கள் எந்தக் கூடுதல் கட்டணமும் இன்றித் தங்கள் ஈமெயில் id சேர்க்கலாம் அல்லது மாற்றிக்கொள்ளலாம். இந்தச் சலுகை, குறிப்பாக ஆதார் அக்கவுண்டில் இதுவரை தங்கள் ஈமெயில் முகவரிகளைப் அப்டேட் செய்யாமல் வைதிருன்தலோ அல்லது புதிய ஈமெயில் முகவரியைப் பயன்படுத்துபவர்களுக்கும் பொருந்தும்.

அதிகாரபூர்வ ஆப் பயன்படுத்தவும்.

இந்த இலவச சேவை UIDAI-இன் அதிகாரப்பூர்வ ஆதார் செயலி மூலம் மட்டுமே கிடைக்கும். ஒருவர் ஆதார் சேவா கேந்திரா அல்லது பிற வழிகள் மூலம் தனது மின்னஞ்சலைப் புதுப்பித்தால், அதற்குக் கட்டணம் விதிக்கப்படலாம். எனவே, இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள மொபைல் செயலியைப் பயன்படுத்துவது கட்டாயமாகும்.

ஆதார் நம்பரில் Email லிங்க் செய்வது அவசியமா?

இன்று, பல அரசு மற்றும் டிஜிட்டல் சேவைகளில் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஈமெயில் லிங்க் செய்து வைத்திருப்பது பல நன்மைகளை வழங்குகிறது. ஏதேனும் காரணத்தால் மொபைல் நெட்வொர்க் கிடைக்காதபோதும், மெசேஜ் (SMS) மூலம் OTP வராதபோதும், ஈமெயில் வழியாக OTP-ஐப் பெறலாம். மேலும், ஆதார் தொடர்பான முக்கியத் தகவல்கள், வெரிபிகேஷன் மற்றும் ஆன்லைன் டாக்யூமென்ட் சேமிப்பு ஆகியவை எளிதாகின்றன. மொபைல் நம்பர் மாறும் பட்சத்தில், ஈமெயில் ஒரு கூடுதல் பாதுகாப்பு அம்சமாகவும் செயல்படுகிறது.

வீட்டிலிருந்தபடி உங்கள் Email id எப்படி அப்டேட் செய்வது?

  • முதலில், உங்கள் ஸ்மார்ட்போனில் அதிகாரப்பூர்வ ஆதார் ஆப்பை இன்ஸ்டால் செய்யவும்.
  • பின்னர், உங்கள் ஆதார் நம்பர் மற்றும் ரெஜிஸ்ட்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பரை பயன்படுத்தி லோகின் செய்யலாம்.
  • ப்ரோபைல் பகுதிக்குச் சென்று, ஈமெயில் அப்டேட் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் புதிய ஈமெயில் முகவரியை உள்ளிடவும்.
  • பின்னர், வெரிபிகேஷன் செயல்முறையை முடிக்க, உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ உள்ளிடவும்.
  • இந்த செயல்முறை முடிந்ததும், உங்கள் ஈமெயில் id உங்கள் ஆதாருடன் இணைக்கப்படும்.

ஆதார் கார்டில் Email இல்லாமல் இருந்தால் உடனே அப்டேட் செய்யுங்கள்.

தங்கள் ஆதார் கார்டில் இன்னும் ஈமெயில் முகவரியைச் சேர்க்காதவர்கள், இந்த இலவச சேவையை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் பழைய ஈமெயில் முகவரி நிறுத்தப்பட்டிருந்தாலோ அல்லது நீங்கள் ஒரு புதிய id உருவாக்கியிருந்தாலோ, அதை உங்கள் ஆதார் பதிவில் அப்டேட் செய்வது நல்லது. இது எதிர்கால OTP வெரிபிகேஷன் மற்றும் ஆன்லைன் சேவைகளைத் தடங்கல் இல்லாமல் சரி செய்யும்.

இதையும் படிங்க WhatsApp Usernames அம்சம் வருகிறது, உங்கள் பெயரை எப்படி செட் செய்வது?

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :