WhatsApp யில் வந்துள்ள புதிய அம்சம், இப்பொழுது நம்பர் இல்லாமல் சேட்டிங் எப்படி செய்வது?

WhatsApp யில் வந்துள்ள புதிய அம்சம், இப்பொழுது நம்பர் இல்லாமல் சேட்டிங் எப்படி செய்வது?

WhatsApp யில் இதுவரை ஒருவரிடம் பேச வேண்டும் என்றால், மொபைல் நம்பர் ஷேர் செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது, இதனால் ஒருவருவக்கு நமது நம்பரை ஷேர் செய்வது என்பது சங்கடமான விஷயமாக இருக்கலாம் இப்பொழுது உங்களுக்கு இது ஒரு சந்தோஷமான செய்தியாக இருக்கும் அதாவது WABetaInfo அறிக்கையின் படி WhatsApp யின் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது இந்த அம்சத்தின் மூலம் நம்பர் இல்லாமல் வெறும் (Username) மூலம் யாரிடம் வேண்டுமானாலும் எளிதாக பேசலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அறிக்கையின்படி இந்த புதிய அம்சத்தை பற்றி உலக முழுதும் கொண்டு செல்ல இருக்கிறது மேலும் நம்பர் இல்லாமல் இந்த அம்சம் உங்கள் போன் நம்பரை பகிராமல் சேட் செய்ய உதவுகிறது. இதன் சிறந்த அம்சம் என்னவென்றால், இந்த அம்சம் iOS மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டிலும் செயல்படுகிறது.

WhatsApp Username யின் விதி மற்றும் முக்கியமான விஷயங்கள்.

உங்கள் பயனர்பெயரில் குறைந்தபட்சம் ஒரு எழுத்தாவது (a-z) இருக்க வேண்டும். நீங்கள் சிறிய எழுத்துக்கள், எண்கள், புள்ளிகள் (.), மற்றும் அடிக்கோடுகள் (_) ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தலாம்.
பயனர்பெயரின் நீளம் 3 முதல் 35 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும்.
உங்கள் பயனர்பெயரை ‘www.’ என்று தொடங்கவோ அல்லது ‘.com’ அல்லது ‘.net’ போன்ற வார்த்தைகளைக் கொண்டு முடிக்கவோ கூடாது

இதையும் படிங்க:தமிழ்நாடு எலெக்ஷன் நெருங்கியாச்சு வோட்டர் லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருக்கிறதா எப்படி செக் செய்வது ?

WhatsApp யில் யூசர் நேம் எப்படி உருவாக்குவது ?

  • முதலில், உங்கள் ஆண்ட்ராய்டு போன் அல்லது ஐபோனில் வாட்ஸ்அப் செயலியைத் திறக்கவும்.
  • நீங்கள் ஆண்ட்ராய்டு வைத்திருந்தால், மேலே உள்ள மூன்று-புள்ளி மெனுவைத் தட்டவும். நீங்கள் ஐபோன் வைத்திருந்தால், உங்கள் சுயவிவரப் புகைப்படத்தைத் தட்டவும். இது உங்களை நேரடியாக ‘நீங்கள்’ (You) பகுதிக்கு அழைத்துச் செல்லும்.
  • இப்போது அமைப்புகளுக்குச் சென்று உங்கள் சுயவிவரப் பெயரைக் கிளிக் செய்யவும்.
  • இங்கே பயனர்பெயர் (Username) விருப்பத்தைக் காண்பீர்கள்.
  • இப்போது நீங்கள் வைத்திருக்க விரும்பும் பயனர்பெயரை உள்ளிடவும்.
  • அவ்வளவுதான். இனி உங்கள் நம்பரை பகிராமல், ஒருவருடன் பேசுவதற்கு உங்கள் யூசர்நேம் பகிரலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo