jio vs vi (1)
தனியார் டெலிகாம் நிறுவனங்களான டெலிகாம் Reliance Jio மற்றும் Vodafone Idea(VI) இந்த இரு நிறுவனங்களும் ஒரே மாதுரியாக இருக்கிறது, உங்கள் பட்ஜெட் சுமார் ₹900 ஆக இருந்தால், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடஃபோன் ஐடியா (Vi) ஆகிய இரண்டு நிறுவனங்களும் ₹859-க்கு திட்டங்களை வழங்குகின்றன. முதல் பார்வையில் இந்த இரண்டு திட்டங்களும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், டேட்டா, 5G மற்றும் கூடுதல் பலன்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. எனவே, ரீசார்ஜ் செய்வதற்கு முன், எந்த நிறுவனத்தின் திட்டம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினசரி 2ஜிபி டேட்டா ஆகியவை அடங்கும். இந்தத் திட்டம் மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் அணுகலையும் வழங்குகிறது. மேலும், 50ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜும் உள்ளது. இந்தத் திட்டத்துடன், ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ சந்தாவையும் 18 மாதங்களுக்குப் பெறுவார்கள். 18 மாதங்களுக்கு இந்த பலனைத் தொடர்ந்து பெற, ஜியோ பயனர்கள் ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தில் தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் 5ஜி மூலம் பயனர்கள் எவ்வளவு டேட்டாவைப் பயன்படுத்தலாம் என்பதற்கு லிமிட் இல்லை. இந்தத் திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 84 நாட்கள் ஆகும்.
வோடஃபோன் ஐடியாவின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டமானது, அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 1.5ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்தத் திட்டத்துடன் டேட்டா டிலைட், பிஞ்ச் ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் விஐ எம்டிவி சந்தா போன்ற கூடுதல் பலன்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துடன் அன்லிமிடெட் 5ஜி-யும் வழங்கப்படுகிறது, இருப்பினும், அது உண்மையாகவே அன்லிமிடெட் ஆகும் அல்ல. வோடஃபோன் ஐடியாவில் வழங்கப்படும் 5ஜி, 28 நாட்களுக்கு 300ஜிபி என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, 28 நாட்களுக்குப் பிறகு, நீங்கள் பயன்படுத்துவதற்காகப் புதிதாக 300ஜிபி லிமிட் கிடைக்கும்.
இதையும் படிங்க Jio VS Airtel VS VI: கம்மி விலையில் மிக சிறந்த 5G நன்மை தருவது யார் எது ஆல் இன் ஆல் பெஸ்ட் ?
இரு திட்டங்களையும் நேரடியாக ஒப்பிட்டுப் பார்த்தால், ஜியோவின் ரூ. 859 திட்டம் அதிக நன்மைகளை வழங்குவதாகத் தெரிகிறது. ஜியோ தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கும் நிலையில், Vi 1.5ஜிபி மட்டுமே வழங்குகிறது. மேலும், ஜியோ ஹாட்ஸ்டார், 50ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ போன்ற கூடுதல் நன்மைகளையும் ஜியோ வழங்குகிறது, ஆனால் Vi-க்கு நேரடிப் போட்டியாக எதுவும் இல்லை.
5ஜி கனெக்ஷன் வசதியைப் பொறுத்தவரை ஜியோவுக்கு ஒரு சாதகம் உள்ளது. ஏனெனில், அந்நிறுவனம் பல பகுதிகளில் முற்றிலும் வரம்பற்ற 5ஜி சேவையை வழங்குகிறது. ஆனால், Vi-யின் 5ஜி டேட்டாவிற்குப் பயன்பாட்டு வரம்புகள் உள்ளன.