Jio vs Airtel Prepaid Recharge Plan under Rs 500 Offer 84 Days Validity which one is best
Reliance jio மற்றும் Airtel இரு டெலிகாம் நிருவனங்களுக்குள் கடுமையான போட்டி நடந்து வருகிறது மேலும் இந்த இரு நிறுவனங்களும் ரூ,500க்குள் ஒரு சிறப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது அதில் jio ரூ,448 மற்றும் மறுபக்கம் ஏர்டெல் 469 இந்த திட்டத்தின் வேலிடிட்டியும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது வெறும் ரூ,21 அதிக இருப்பதால் இந்த திட்டத்தில் அப்படி என்ன வித்தியாசம் இருக்கிறது இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் இந்த திட்டமானது உங்களுக்கு கால்கள் மட்டும் தேவைப்பட்டால், ஜியோவின் ரூ. 448 திட்டம் ஒரு நல்ல தேர்வாகும். இது 84 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் , அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் மற்றும் மொத்தம் 1,000 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது. இருப்பினும், இந்தத் திட்டத்தில் வழக்கமான மொபைல் டேட்டா எதுவும் சேர்க்கப்படவில்லை. தேவைப்பட்டால், பயனர்கள் ஒரு தனி டேட்டா வவுச்சர் மூலம் இன்டர்நெட் டேட்டாவை வாங்கிக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் ஜியோ டிவி மற்றும் ஜியோ AI கிளவுட் அணுகலும் அடங்கும். இந்தத் திட்டம் வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலச் வேலிடிட்டி மற்றும் குறைந்த விலையில் கால்களை வழங்கும் இந்தத் திட்டம், மொபைல் இணையத்திற்காக வைஃபை அல்லது பிற கனேக்ஷங்களை சார்ந்திருக்கும் பயனர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
ஏர்டெல்லின் வாய்ஸ்-ஒன்லி திட்டம், ஜியோவின் திட்டத்தை விட ரூ,21 அதிகம். இந்த திட்டத்தின் விலை ரூ,469 ஆகும், இந்த திட்டத்தில் , 84 நாட்கள் சேவை வேலிடிட்டி காலம் மற்றும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் ஆகியவற்றையும் வழங்குகிறது. மேலும் கஸ்டமர்களுக்கு மொத்தம் 900 எஸ்எம்எஸ்-களும் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் வழக்கமான மொபைல் டேட்டா கிடைக்காது, மேலும் இன்டர்நெட் தேவைப்பட்டால், ஒரு தனி டேட்டா வவுச்சர் தேவைப்படும். கூடுதல் பலன்களாக, ஏர்டெல் இந்தத் திட்டத்துடன் 12 மாதங்களுக்கான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் அக்சஸ் வழங்குகிறது. சேஃப் நெட்வொர்க் சேவை மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் போன்ற பலன்களும் இதில் அடங்கும்.
விலை மற்றும் அடிப்படை காலிங் தேவைகளை மட்டும் கருத்தில் கொண்டால், ஜியோவின் ரூ. 448 திட்டம் சற்றே குறைவானது . இது ஏர்டெல்லின் திட்டத்தை விட ரூ. 21 குறைவானது , மேலும் கூடுதலாக 100 எஸ்எம்எஸ்-களையும் வழங்குகிறது. இருப்பினும், போட்டோக்ராபி, சோசியல் மீடியா ரேக்கர்ட்கள் அல்லது பிற ஆக்கப்பூர்வமான உள்ளடக்கங்களை உருவாக்க உங்களால் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்தைப் பயன்படுத்த முடிந்தால், கூடுதலாகச் செலுத்தும் ரூ. 21-க்கு ஏர்டெல்லின் ரூ. 469 திட்டம் அதிக மதிப்புள்ளதாக இருக்கலாம்.
இதையும் படிங்க மீண்டும் வந்த BSNL யின் ஸ்பெஷல் பிளான் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங், 28 நாள் வேலிடிட்டி