Jio,Airtel, மற்றும் Vodafone idea யின் இந்த திட்டத்தில் எது பெஸ்ட்
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) உத்தரவுக்கு பிறகு Reliance Jio, Bharti Airtel, மற்றும் Vodafone Idea (Vi) உள்ளிட்ட தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அதன் புதிய SMS மற்றும் வொயிஸ் காலிங் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, அதாவது இந்த திட்டங்களின் நோக்கம் ஒரு நீண்ட நாட்களுக்கு சிம் செயலில் வைத்திருக்க ஆகும் எனவே இங்கு jio,airtel, மற்றும் vi யின் வொயிஸ் மற்றும் SMS திட்டங்களில் எது பெஸ்ட் என்பதை பார்ப்போம்
Reliance Jio வொய்ஸ் மற்றும் SMS திட்டம்.
ரிலையன்ஸ் ஜியோ இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் வொய்ஸ் மற்றும் SMS மட்டுமே நன்மைகள் ரூ. 458 மற்றும் ரூ.1958 ஆகும். அவை வழங்கும் நன்மைகள் இதோ:
- ஜியோவின் ரூ 458 திட்டம் – அன்லிமிடெட் காலிங் மற்றும் 84 நாட்களுக்கு 1000 SMS வழங்குகிறது
- ஜியோவின் ரூ 1958 திட்டம் – அன்லிமிடெட் காலிங் மற்றும் 365 நாட்களுக்கு 3600 SMS வழங்குகிறது
Bharti Airtel SMS மற்றும் வொய்ஸ் கால் திட்டம்.
பார்தி ஏர்டெல் நான்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை வொய்ஸ் மற்றும் SMS மட்டுமே பலன்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது, அவற்றின் விலை ரூ.499, ரூ.548, ரூ.1959 மற்றும் ரூ.2249. அவை வழங்கும் நன்மைகள் இதோ:
- ரூ.499 -அன்லிமிடெட் காலிங் மற்றும் 84 நாட்களுக்கு 900 எஸ்எம்எஸ் வழங்குகிறது
- ரூ.548 – அன்லிமிடெட் காலிங், 900 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்களுக்கு 7ஜிபி டேட்டா.வழங்குகிறது
- ரூ 1959 – அன்லிமிடெட் காலிங் மற்றும் 3600 எஸ்எம்எஸ், 365 நாட்களுக்கு வழங்குகிறது.
- ரூ.2249 – 30ஜிபி டேட்டா, காலிங் மற்றும் 365 நாட்களுக்கு 3600 எஸ்எம்எஸ் வழங்குகிறது.
வோடபோன் ஐடியா எஸ்எம்எஸ் மற்றும் வொய்ஸ் மட்டும் திட்டங்கள்
Vodafone Idea ஆனது ரூ.1460 விலையில் ஒரு எஸ்எம்எஸ் மற்றும் வொய்ஸ் மட்டும் பேக்கை மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. திட்டத்துடன் வழங்கப்படும் நன்மைகள்:
ரூ.1460 திட்டம் – 270 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 SMS வழங்குகிறது .
Vodafone Idea யின் ரூ,209 VS ரூ,199க்கும் என்ன வித்தியாசம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile