IPL 2024 :Jio, Airtel மற்றும் Vi எது பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டங்கள்

IPL 2024 :Jio, Airtel மற்றும் Vi எது பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டங்கள்
HIGHLIGHTS

TATA IPL இந்தியன் ப்ரீமியம் லீக் (IPL 2024)இப்பொழுது ஆரம்பமாக இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது

இந்த இரண்டு மாத கிரிக்கெட் களியாட்டத்தை ஜியோ சினிமா மூலம் இலவசமாக லைவ் ஸ்ட்ரீம் செய்யலாம்,

IPL போட்டி நான்கு முதல் ஐந்து மணிநேரம் வரை நீடிக்கும்,

TATA IPL இந்தியன் ப்ரீமியம் லீக் (IPL 2024)இப்பொழுது ஆரம்பமாக இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது, இந்த இரண்டு மாத கிரிக்கெட் களியாட்டத்தை ஜியோ சினிமா மூலம் இலவசமாக நேரலை ஸ்ட்ரீம் செய்யலாம், பிரமிக்க வைக்கும் 4K வரையிலான தீர்மானங்களுடன். ஒரு வழக்கமான IPL போட்டி நான்கு முதல் ஐந்து மணிநேரம் வரை நீடிக்கும், மேலும் அதை உங்கள் மொபைல் போனில் ஸ்ட்ரீம் செய்ய உங்களுக்கு நிறைய டேட்டா தேவைப்படும்.

உங்களுக்கு அதிக இன்டர்நெட் தேவைப்பட்டால், நீங்கள் அதிக ரெசளுசனில் Cricket Match பார்க்க விரும்புவிர்கள FHDயில் (1080p) ஐபிஎல் போட்டியைப் பார்த்தால், உங்களுக்கு சுமார் 3.5ஜிபி டேட்டா செலவாகும். இருப்பினும், இந்த ஐபிஎல் 2024 ஸ்ட்ரீமிங்கை 4Kயில் பார்த்தால், தோராயமாக 22ஜிபி டேட்டா பயன்படுத்தப்படும்.

இப்பொழுது நீங்கள் இதன் முழு டார்ணமென்ட் பார்க்க விரும்பினால், ஹை ரெசளுசனில் நீங்கள் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கும்போது, ​​IPL போட்டியை FHDயில் (1080p) பார்த்தால், அது உங்கள் டேட்டாவில் சுமார் 3.5ஜிபியைப் பயன்படுத்தப் போகிறது. இருப்பினும், இந்த ஐபிஎல் 2024 ஸ்ட்ரீமிங்கை 4Kயில் பார்த்தால், தோராயமாக 22ஜிபி டேட்டா பயன்படுத்தப்படும்.

இப்பொழுது நீங்கள் இந்த முழு டார்ணமெண்டை பார்க்க விரும்பினால், எவ்வளவு டேட்டா தேவைப்படும் அதே போல் இந்த IPL 2024 ஆரம்பிக்கும் முன் Airtel, Reliance Jio மற்றும் Vi யின் சில மிக சிறந்த ரீச்சார்ஜ் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது அதில் எது சிறந்தது என்று பார்க்கலாம் வாஙக

இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள், டாடா ஐபிஎல் 2024 போட்டிகளை ஸ்ட்ரீம் செய்ய உங்களுக்கு உதவும். டேட்டா தேவைகளை மனதில் வைத்து, ஒரு நாளைக்கு குறைந்தது 3ஜிபி 4ஜி டேட்டாவை வழங்கும் திட்டங்களை இங்கு சேர்த்துள்ளோம். ஏர்டெல் மற்றும் ஜியோவின் சில திட்டங்களும் 5ஜியை வழங்குகின்றன, இருப்பினும் இதற்கு உங்களிடம் 5ஜி போன் இருக்க வேண்டும். இந்தத் திட்டங்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

Tata IPL 2024 பார்ப்பதற்க்கு Airtel யின் பெஸ்ட் பிளான்

Airtel 699ரூபாய் கொண்ட திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது, இருப்பினும் இதில் இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது, இந்தத் திட்டத்துடன் நீங்கள் முழு ஐபிஎல் 2024 போட்டியையும் பார்க்கலாம். இந்த திட்டத்தில் வரம்பற்ற 5G அணுகலும் கிடைக்கிறது, இருப்பினும் இதற்கு உங்களிடம் 5G ஃபோன் இருக்க வேண்டும் மற்றும் உங்கள் பகுதியில் Airtel 5G நெட்வொர்க் இருக்க வேண்டும்.

Tata IPL 2024 பார்ப்பதற்க்கான Jio பெஸ்ட் Plan

Jio யின் 444ரூபாயில் வரும் ரீச்சார்ஜ் திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் வழங்குகிறது இதனுடன் இதில் 100GB டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர இதே போல் மற்றொரு திட்டத்தை பற்றி பேசினால், அது 667ரூபாயில் வருகிறது இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 90 நாட்களுக்கு வேலிடிட்டி 150 ஜிபி டேட்டாவை வழங்குகிறது இருப்பினும், இந்த திட்டங்களில் டேட்டா மட்டுமே கிடைக்கும். இந்தத் திட்டங்களை டேட்டா வவுச்சர்கள் என்றும் அழைக்கலாம். உங்கள் தற்போதைய திட்டத்துடன் இந்தத் திட்டங்களைப் பயன்படுத்தலாம்.

இதை தவிர ஜியோவிடம் 999 ரூபாயில் ஒரு திட்டம் இருக்கிறது இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது, இருப்பினும் இந்த திட்டத்தில் Unlimited 5Gடேட்டா வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தை டாடா ஐபிஎல் 2024 பார்க்கவும் பயன்படுத்தலாம். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியாகும் அதாவது இந்த திட்டத்திற்கு மாதம் ரூ.333 செலுத்த வேண்டும். இருப்பினும், இதேபோன்ற மற்றொரு திட்டத்தை நீங்கள் விரும்பினால், நீங்கள் ரூ.399 திட்டத்தை எடுக்கலாம். இந்த திட்டமும் தினசரி 3ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தில் கூடுதல் 6ஜிபி போனஸ் டேட்டா கிடைக்கிறது.

Tata IPL 2024 பார்ப்பதற்க்கு Vi யின் பெஸ்ட் பிளான்

VI யில் வரும் இந்த திட்டத்தை பற்றி பேசினால், 699 ரூபாயில் வருகிறது, இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது, இருப்பினும், இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும். இந்தத் திட்டத்தைத் தவிர, நிறுவனம் ரூ. 475 விலையில் ஒரு திட்டத்தையும் கொண்டுள்ளது, இந்த திட்டத்தில் தினமும் 4ஜிபி டேட்டா 28 நாட்கள் செல்லுபடியாகும். இருப்பினும், இது தவிர, பல டேட்டா வவுச்சர்களும் Vi ஆல் உங்களுக்கு வழங்கப்படுகின்றன, இது ரூ.25 முதல் தொடங்குகிறது.

இதையும் படிங்க: TECNO POVA 6 Pro இந்தியாவில் Playground Season 3 மார்ச் 29 அறிமுகம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo