OnePlus N6x vs iQOO Z11 Lite
OnePlus இந்தியாவில் சமிபத்தில் அதன் OnePlus N6x போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இதற்க்கு சரியாக ஈடு கொடுக்கும் அளவுக்கு எந்த போன சரியாக இருக்கும் என பார்க்கும்போது iQOO Z11 Lite போனை கொண்டு வந்தது இந்த போனுடன் அதன் கேமரா ,ப்ரோசெசர், பேட்டரி மற்றும் பலவற்றை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
ஒன்பிளஸ் N6x-ன் 4GB+64GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ₹18,999 விலையிலும் , 4GB+128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ₹20,999 விலையிலும் கிடைக்கிறது. iQOO Z11 Lite-ன் 4GB+128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ₹19,499 விலையிலும், 6GB+256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ₹21,499 விலையிலும் கிடைக்கிறது.
ஒன்பிளஸ் N6x ஆனது 720×1570 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 19.6:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 900 நிட்ஸ் வரையிலான உச்சபட்ச பிரகாசம் கொண்ட 6.8-இன்ச் HD+ LCD டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. iQOO Z11 Lite ஆனது 1600×720 பிக்சல்கள் ரெசல்யூஷன், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் வரையிலான HBM பிரகாசம் கொண்ட 6.74-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் N6x ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 6360 அப்பெக்ஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. iQOO Z11 லைட் ஆனது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 6nm பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.
விளம்பரம்
ஒன்பிளஸ் N6x, ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 16-இல் இயங்குகிறது. ஐகூ Z11 லைட், ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆரிஜின் ஓஎஸ் 6-இல் இயங்குகிறது.
இதையும் படிங்க:Motorola Edge 70 Pro+ vs Samsung Galaxy A27: எக்ஸ்ட்ரா விலை வித்தியாசத்தில் எது பெஸ்ட்?
ஒன்பிளஸ் N6x ஆனது f/2.2 அபெர்ச்சர் மற்றும் 10x வரையிலான டிஜிட்டல் ஜூம் கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. மற்றும் ஒன்பிளஸ் N6x, செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக f/2.2 அபெர்ச்சர் கொண்ட 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது. அதுவே மறுபுறம் iQOO Z11 Lite ஆனது f/1.8 அபெர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும், f/3.0 அபெர்ச்சர் கொண்ட 0.08 மெகாபிக்சல் செகண்டரி நிலை கேமராவையும் கொண்டுள்ளது மற்றும் செல்பிக்கு iQOO Z11 Lite-ம் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக f/2.2 அபெர்ச்சர் கொண்ட 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் N6x ஆனது 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 15W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. iQOO Z11 Lite ஆனது 6,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது..