Moto G54 5G VS Moto G34 5G இந்த கடும் போட்டியில் யாருக்கு வெற்றி

Moto G54 5G VS Moto G34 5G இந்த கடும் போட்டியில் யாருக்கு வெற்றி
HIGHLIGHTS

Moto G34 5G மற்றும் Moto G54 5G யின் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

இப்பொழுது G34 குறைந்த விலை ஸ்மார்ட்போனுக்கும் சிறிது விலை அதிகம் கொண்ட G54 போனில் என்ன வித்தியாசம்

இரண்டு ஸ்மார்ட்போன்களும் குறைந்த விலையில் இருந்தாலும் கவர்ச்சிகரமான டிசைன்களை வழங்குகின்றன

Moto G34 5G மற்றும் Moto G54 5G யின் ஒப்பிட்டு இதிலிருக்கும் வசதிகள் என்ன என்ன என்பதை எடுத்து சொல்ல முயற்சிக்கிறோம் உங்களின் பணத்தை மிச்சப்படுத்த அதிக விலை ஸ்மார்ட்போன் பதிலாக குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன் வேண்டும் என்று நினைகிறிர்களா அல்லது மிக சிறந்த அம்சங்களை பெற அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்க நினைகிறிர்களா? ஆனல் நாம் இப்பொழுது G34 குறைந்த விலை ஸ்மார்ட்போனுக்கும் சிறிது விலை அதிகம் கொண்ட G54 போனில் என்ன வித்தியாசம் இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Moto G34 5G vs Moto G54 5G: Specs Comparison

டிசைன்

இரண்டு ஸ்மார்ட்போன்களும் குறைந்த விலையில் இருந்தாலும் கவர்ச்சிகரமான டிசைன்களை வழங்குகின்றன. இவை சற்று ஒரே டிசைனுடன் வருகின்றன, இதில் பின்புறத்தில் ஒரு ரெக்டங்குளர் இரட்டை கேமரா ஹம்ப் உள்ளது மற்றும் மீதமுள்ள பேனல்களுக்கு எளிய கலர் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் டிஸ்பிளேக்கான பஞ்ச்-ஹோல் கேமரா கட்அவுட்டையும் வழங்குகிறது ஆனால் அவற்றின் கீழ் பெசல்கள் சற்று தடிமனாக இருக்கும்.

இவை இரண்டும் பிளாஸ்டிக் யூனிபாடி வந்தாலும், குறைந்த விலை Moto G34 பின்புறத்தில் வேகன் லெதர் பினிஷ் வழங்குகிறது, இது G54 ஐ விட கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.

டிஸ்ப்ளே

மோட்டோரோலா G54 யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், 6.5 இன்ச் IPS LCD ஸ்க்ரீன் உடன் வருகிறது, மேலும் இது FHD+ ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்டுடன் வருகிறது. அதுவே குறைந்த விலை கொண்ட G34 5G ஆனது 6.5-இன்ச் LCD பேனலை 120 ஹெர்ட்ஸ் வரைரெப்ராஸ் ரேட்டுடன் வழங்குகிறது, ஆனால் அதன் ரேசளுசன் 720p யில் சற்று குறைவாக உள்ளது. உங்கள் மொபைலில் வெப் சீரிஸ் அல்லது திரைப்படங்களைப் பார்க்க நீங்கள் விரும்பினால், Moto G54 உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

பர்போமான்ஸ்

பர்போம்னாஸ் பற்றி பேசினால் Moto G54 5G யில் மீடியாடேக் டிமான்சிட்டி 7020 சிப்செட்டில் இருக்கிறது மேலும் இதில் இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 OS உடன் வெளியிடப்பட்டது. மறுபுறம், Moto G34 5G ஆனது Snapdragon 695 5G சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு பர்போமான்சில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பர்போமான்ஸ் வழங்குகின்றன. புதிய போனாக இருப்பதால், G34 ஆனது சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 சாப்ட்வேர் உடன் வருகிறது. அதன் டாப்-எண்ட் 8ஜிபி/128ஜிபி வேரியன்ட் ஸ்மார்ட் டிவியுடன் போனை வயர்லெஸ் முறையில் இணைக்க மோட்டோ கனெக்ட் அம்சத்தைப் வழங்குகிறது

கேமரா

கேமராவை பற்றி பேசுகையில் G54 5G யில் 50MP OIS ப்ரைமரி கேமரா வழங்குகிறது இது 8MP அல்ட்ராவைடு கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், G34 5G இல் 50MP ப்ரைம் கேமராவும் உள்ளது, ஆனால் இது OIS சப்போர்ட் கொண்டிருக்கவில்லை. இதனுடன் 2எம்பி மேக்ரோ கேமராவும் உள்ளது. கூடுதலாக, இரண்டு போனிலும் முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது.

இதையும் படிங்க: paytm யில் போட்டு வைத்த பணத்தை திரும்ப எப்படி பெறுவது?

பேட்டரி

கடைசியாக பேட்டரி பற்றி பேசுகையில் இந்த ஸ்மார்ட்போனில் பவரை வழங்க, Moto G54 யில் 6000mAh பேட்டரி கொடுக்கப்படிள்ளது மற்றும் நிறுவனம் 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கின் சப்போர்டை வழங்கியுள்ளது. ஒப்பிடுகையில், Moto G34 ஆனது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 18W சார்ஜிங்கை மட்டுமே சப்போர்ட் செய்கிறது.

Moto G34 5G vs Moto G54 5G: Price

G34 யின் 4G/128GB வேரியண்டின் விலை ரூ.10,999 ஆக வைக்கப்பட்டுள்ளது, மேலும் 8GB RAM வேரியண்டிர்க்கு நீங்கள் ரூ.11,999 செலுத்த வேண்டும். G54 இன் விலை, மறுபுறம், 8GB/128GB மாடலுக்கு ரூ.13,999 யில் தொடங்குகிறது. உங்கள் பட்ஜெட்டை ரூ.15,999 ஆக நீட்டினால் அதன் 12ஜிபி/256ஜிபி வேரியன்ட் உங்களுக்கு கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo