Google Pixel 10 Pro XL vs iPhone 16 Pro Max: இந்த இரண்டு பவர்புள் போன்களில் எது பக்கா மாஸ் ?

Google Pixel 10 Pro XL vs iPhone 16 Pro Max: இந்த இரண்டு பவர்புள் போன்களில் எது பக்கா மாஸ் ?

Google சமிபத்தில் அதன் Google Pixel 10 Pro XL போனை அறிமுகம் செய்தது. இதில் மிக சிறந்த டிஸ்ப்ளே,ப்ரோசெசர் போன்ற பல அம்சங்கள் இருக்கிறது அந்த வகையில் Google Pixel 10 Pro XL யில் Google Tensor G5 ப்ரோசெசர் மற்றும் இதன் மறுபக்கம் iPhone 16 Pro Max போனில் A18 Pro ப்ரோசெசர் கொண்டுள்ளது இந்த இரு போனையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Google Pixel 10 Pro XL vs iPhone 16 Pro Max : டிஸ்ப்ளே

  • Google Pixel 10 Pro XL 6.8-இன்ச் சூப்பர் Actua LTPO OLED டிஸ்ப்ளேவை 1344 x 2992 பிக்சல்கள் ரேசளுசன் , 1-120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் மற்றும் 3,300 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.
  • iPhone 16 Pro Max 6.9-இன்ச் LTPO Super Retina XDR OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1206×2622 பிக்சல்கள் ரேசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட் , 2000 நிட்ஸ் வரை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது.

Google Pixel 10 Pro XL vs iPhone 16 Pro Max : ப்ரோசெசர்

  • கூகிள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் கூகிள் டென்சர் ஜி5 ப்ரோசெசர் கொண்டுள்ளது.இத ன் ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசுகையில் கூகிள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆண்ட்ராய்டு 16 பிளாட்பார்மில் இயங்குகிறது.
  • அதுவே ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போனில் A18 Pro சிப் ப்ரோசெஸ்ருடன் இதில் Max iOS 18 இல் இயங்குகிறது.

Google Pixel 10 Pro XL vs iPhone 16 Pro Max : ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

  • கூகிள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பகத்துடன் வருகிறது.
  • ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

Google Pixel 10 Pro XL vs iPhone 16 Pro Max :கேமரா அமைப்பு

  • கூகிள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல்லின் பின்புறம் 50 மெகாபிக்சல் வைட் கேமரா, 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. அதே நேரத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 42 மெகாபிக்சல் இரட்டை PD முன் கேமரா உள்ளது.
  • ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் வைட் கேமரா, 12 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஆங்கிள் கேமரா உள்ளது. அதே நேரத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக f/1.9 அப்ரட்ஜர் கொண்ட 12 மெகாபிக்சல் ட்ரூடெப்த் முன் கேமரா உள்ளது.

Google Pixel 10 Pro XL vs iPhone 16 Pro Max : கனேக்ட்டிவிட்டி விருப்பங்கள்

  • கூகிள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல்லில் இரட்டை சிம், வைஃபை 7, புளூடூத் வி6, என்எஃப்சி, ஜிபிஎஸ், கூகிள் காஸ்ட் மற்றும் யூஎஸ்பி டைப் சி 3.2 போர்ட் ஆகியவை அடங்கும்.
  • Samsung Galaxy S25 Ultra ஆனது Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, UWB, GPS மற்றும் USB Type C port ஆகியவற்றை உள்ளடக்கியது.
    ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் 5ஜி, டூயல் சிம், வைஃபை 7, 5ஜி கனெக்ஷன் , NFC மற்றும் புளூடூத் 5.3 ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க:Lava Blaze AMOLED 2 5G VS Moto G45 5G:இந்த குறைந்த விலையில் வரும் போனில் எது பெஸ்ட்?

Google Pixel 10 Pro XL vs iPhone 16 Pro Max விலை தகவல்

  • Google Pixel 9 Pro XL யின் 16GB RAM/256GB வேரியன்ட் விலை ரூ, 1,24,999 ஆகும்
  • iPhone 16 Pro Max யின் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ, 1,44,900, இதன் 512GB ஸ்டோரேஜ் விலை 1,64,900ரூபாய் மற்றும் இதன் 1TB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ,1,84,900 ஆகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo