AC மற்றும் இன்டக்ஷன் பயன்படுவோருக்கு எச்சரிக்கை உங்களுக்கு பல மடங்கு கரண்ட் பில் மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்
கொளுத்தும் வெயில் காலம் இருப்பதால் AC இல்லாமல் வாழ்வது கடினம், இதன் மற்றொரு பக்கம் LPG சிலிண்டர் பற்றகுரையால் பெரும்பாலான மக்கள் இண்டேக்ஷன் ஸ்டோவ் பயன்படுத்தி வருகிறார்கள், ஆனால் நீங்கள் AC மற்றும் இண்டக்ஷன் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் உங்களின் கரண்ட் பில் பல மடங்கு அதிகரிக்கலாம். மேலும் இந்த பிரச்சனயனது அதிக பவர் எடுக்கும் AC மற்றும் இண்டக்ஷன் மூலம் அதிக மின்சாரம் லோடிங் செய்யப்படுகிறது மேலும் இது சில நேரங்களில் அபாய கட்டத்தை நெருங்கலாம். இதன் காரணமாக அபராதம் விதிக்கப்படலாம் மேலும் இதன் முழு தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Surveyஎந்த எந்த உபகரணங்களுக்கு அதிக மின்சாரம் பிடிக்கும்?
இப்போதெல்லாம், மார்கெட்டில் கிடைக்கும் இண்டக்ஷன் அடுப்புகள் பொதுவாக 1 கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை பவர் கொண்டவையாக இருக்கிறது . பெரும்பாலான மக்கள், உணவை வேகமாக தயாரிப்பதற்காக 2 கிலோவாட் இண்டக்ஷன் அடுப்பை வாங்குகிறார்கள். மறுபுறம், ஏசியைப் பற்றிப் பேசினால், வீடுகளில் 1 டன் முதல் 2 டன் வரையிலான ஏசிகள் பொருத்தப்படுகின்றன. ஒரு 1 டன் ஏசி சுமார் 1.2 முதல் 1.5 கிலோவாட் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது, அதேசமயம் ஒரு 1.5 டன் ஏசி சுமார் 1.5 முதல் 2 கிலோவாட் வரையிலான மின்சார பவர் இழுக்கும் எடுத்துக்கொள்ளும். இதன் மூலம், நீங்கள் ஏசியை மட்டும் இயக்கினாலும், உங்கள் கனெக்ஷனில் குறைந்தபட்சம் 3 கிலோவாட் பவர் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
அவற்றை ஒரே நேரத்தில் இயக்கினால் என்ன பாதிப்பு ஏற்படும்?

இப்போது உங்கள் வீட்டில் 2 கிலோவாட் இன்டக்ஷன் மற்றும் 2 கிலோவாட் ஏசி ஒரே நேரத்தில் இயங்குவதாகக் கற்பனை செய்து பாருங்கள். அப்போது, அவை இரண்டும் சேர்ந்து சுமார் 4 கிலோவாட் மின்சாரம் எடுத்துகொல்கிறது. இது தவிர, காற்றாடி(Fan), பிரிட்ஜ் , TV, கூலர் போன்ற பிற பொருட்களில் இருந்தும் வீட்டில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், மொத்த மின்சார பவர் அதிகபடியாக இழுக்க கூடும் உங்கள் கனெக்ஷனில் லிமிட்டை எளிதில் தாண்டிவிடும். உங்கள் மின் கனெக்ஷன் 2 கிலோவாட் அல்லது 3 கிலோவாட்டாக இருந்தால், அது அதிக பவர் எடுத்து (overload) எனும் நிலை ஏற்படுகிறது. மின்சாரத் துறை இதுபோன்ற நிகழ்வுகளைக் கண்காணித்து, பவர் நிர்ணயிக்கப்பட்ட லிமிட்டை தாண்டும்போது, பவர் மீறியதற்காக ஒரு நோட்டிபிகேஷன் அனுப்பப்படலாம்.

நோட்டிபிகேஷன்கள் மற்றும் அபராதங்கள் குறித்த அச்சுறுத்தல் ஏன்?
மின்சாரத் துறை ஒவ்வொரு கனெக்ஷனுக்கு ஒரு குறிப்பிட்ட பவரை நிர்ணயிக்கிறது. ஒரு பவர் கன்சம்ப்ஷ்ன் (power consumption) தொடர்ந்து இந்த லிமிட்டை மீறினால், அது ஒரு மீறலாகக் கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மின்சுமையை அதிகரிக்குமாறு துறை உங்களைக் கேட்கலாம். சில நேரங்களில், குறிப்பாக அதிகப்படியான எலெக்ட்ரிசிட்டி பவரை உருஞ்சும் பச்சத்தில் மேலும் அது நீண்ட காலமாகத் தொடர்ந்தால், நேரடி அபராதங்களும் விதிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க LPG New Rules:ஆன்லைன் கேஸ் புக்கிங் முதல் விலை உயர்வு உடன் பல மாற்றங்கள் இருக்கு என்ன பாருங்க
இரண்டையும் இயக்க வேண்டியிருந்தால் என்ன செய்வது?
உங்கள் வீட்டில் இன்டக்ஷன் மற்றும் ஏசி ஆகிய இரண்டும் அவசியமாக இருந்து, அவற்றை ஒன்றாக இயக்க விரும்பினால், உங்கள் மின்சார இணைப்பில் மின்சுமையை அதிகரிப்பதே பாதுகாப்பான வழியாகும். இதற்காக உங்கள் அருகிலுள்ள மின்சாரத் துறையில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். முக்கியமாக, tamilnadu power Distribution Corporation லிமிடெட் (TNPDCL) ஆப் அல்லது வெப்சைட் மூலமாகவும் மின்சுமை அதிகரிப்புக் கோரிக்கையை எளிதாகச் சமர்ப்பிக்கலாம்.

நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் இன்டக்ஷன் மற்றும் ஏசி இரண்டையும் ஒரே நேரத்தில் தொடர்ந்து பயன்படுத்தினால், குறைந்தபட்சம் 6 கிலோவாட் திறன் கொண்ட கனெக்ஷன் பெறுவது சிறந்தது. இது அதிகப்படியான எலெக்ட்ரிசிட்டி பவர் பிரச்சனையை நீக்குவது மட்டுமல்லாமல், நோட்டிபிகேஷன் அல்லது அபராதங்கள் விதிக்கப்படும் அபாயத்தையும் தவிர்க்கும்.
முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்
இப்போதெல்லாம் வீடுகளில் எலெக்ட்ரிசிட்டி டிவைஸ்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்தாலும், பெரும்பாலான மக்கள் தங்கள் எலக்ட்ரிக் கனெக்ஷனில் பவர் கன்சம்ஷன் அதாவது நுகர்வு அப்டேட் செய்வதில்லை. இது பிற்காலத்தில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, நீங்கள் ஒரு புதிய அதிக சக்தி வாய்ந்த டிவாஸ் வாங்கும்போது, முதலில் உங்கள் கனெக்ஷன் பவர் சரிபார்க்கவும். ஒரு சிறிய முன்னெச்சரிக்கை, உங்களுக்கு ஏற்படக்கூடிய பெரும் சிரமத்தையும் செலவையும் தவிர்க்க உதவும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile