மே 1 முதல் புதிய விதி மாற்றம் ATM, ரயில்வே கேஷ் சிலிண்டர் அனைத்து தெருஞ்சிகொங்க
மே 1 ,2025 முதல் புதிய விதி மாற்றம் இந்த புதிய விதியின் மாற்றத்தால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிபடயலாம் மேலும் இந்த புதிய மாற்றத்தில் பேங்க் அக்கவுன்ட் விதி ATM ட்ரேன்செக்சன்,Fastrack, ரயில்வே டிக்கெட், கேஸ் சிலிண்டர் போன்ற பல விலைகளை மாற்றியுள்ளது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyATM யிலிருந்து பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும்
அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்ட Reserve Bank of India (RBI) புதிய விதியின் படி மே 1, 2025 முதல் ATM யிலிருந்து பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் ஏடிஎம்களைப் பராமரித்தல், செக்யுரிட்டி சிஸ்டம்களை மேம்படுத்துதல் மற்றும் செயல்பாடுகளை நிர்வகித்தல் ஆகியவை காலப்போக்கில் அதிக விலை கொண்டதாகிவிட்டன. பேங்க் இந்தச் செலவுகளைச் சமாளிக்கவும், கஸ்டமர்களுக்கு சிறந்த, பாதுகாப்பான சேவைகளைத் தொடர்ந்து வழங்கவும், மே 1, 2025 முதல் ATM கட்டணங்களில் ஒரு சிறிய உயர்வை ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ளது. மேலும் முன்பு 3 முறைக்கும் மேல் பணம் எடுத்தல் கட்டணம் வசூளிக்கப்பட்டது ஆனால்
மே 1, 2025 முதல், பின்வரும் புதிய கட்டணங்கள் பொருந்தும்:
- இலவச ட்ரேன்செக்சன் லிமிட்டிற்கு பிறகு ஒவ்வொரு பணப் ட்ரேன்செக்சன்க்கும் ₹23
- சொந்த வங்கி மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் கட்டணங்கள் பொருந்தும்.
- இந்தியாவில் உள்ள அனைத்து சேவிங் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தும். ATM உள்கட்டமைப்பைப் பராமரிப்பதிலும் பாதுகாப்பான சேவைகளை வழங்குவதிலும் அதிகரித்த செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
GPS வசதி கொண்ட டோல் டேக்ஸ்
சமீபத்தில் மே 1 முதல் FASTag நீக்கப்படும் என்றும், அதற்குப் பதிலாக GPS அடிப்படையிலான அமைப்பின் கீழ் சுங்கக் (Toll)கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் செய்தி வெளியானது. இருப்பினும், நாடு முழுவதும் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க வரியை அமல்படுத்தும் திட்டம் எதுவும் இதுவரை இல்லை என்று போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இது ஃபாஸ்டேக் இன்னும் செயல்படுகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. விதி மாறப்போகிறது என்று நினைத்து நீங்கள் அதை ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், உங்கள் ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். சில வழித்தடங்களில் கலப்பின சுங்கச்சாவடி அமைப்பு சோதிக்கப்படும் என்று கூறப்படுகிறது, ஆனால் ஃபாஸ்டேக் தொடர்ந்து செயல்படும்.
ரயில்வே டிக்கெட்
மே 1,2025 முதல் டிக்கெட் புக்கிங்கின் போது மிக பெரிய மாற்றம் ஏற்படும் இதன் மூலம் refund செயல் முறையில் மாற்றம் ஏற்ப்படும் மேலும் வேய்ட்டிங் டிக்கெட் எடுக்கும்போது Ac, அல்லது ஸ்லீப்பர் கோட்சில் அனுமதிக்கப்படாது, மேலும் நீங்கள் வெட்டிங் டிக்கெட் எடுத்தல் ஜெனரல் கோச்சில் மட்டுமே பயணிக்க முடியும் இதை தவிர டிக்கெட் முன் பதிவு செய்யும்போது இப்பொழுது 120 லிருந்து 6௦ நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
Gas சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் LPG சிலிண்டரின் விலை மாறும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த முறையும் மே 1, 2025 அன்று, எரிவாயு சிலிண்டரின் விலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம். சிலிண்டர்களின் விலையை மாற்றுவது சாமானிய மக்களின் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க WhatsApp பயனர்களுக்கு புதிய மஜாவான அம்சம் இனி சேட் இருக்கும் இன்னும் சுவாரஸ்யமாக
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile