முதல் முறையாக விற்பனைக்கு வரும் Ai Plus Nova 2 Neo 5G மற்றும் Nova 2 Pro போன்
மாதவ் சேத் தலைமையிலான இந்திய நிறுவனமான ‘ Ai Plus Nova 2 Neo 5G மற்றும் Nova 2 Pro 5G என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை சமிபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னா கலந்துகொண்ட ‘இந்தியாஸ் காட் நோவா’ என்ற நிகழ்வில் இந்த போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் இந்த இரண்டு போனையும் இன்று இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மேலும் இந்த போனில் இந்த போன்கள் 6000 mAh பேட்டரி மற்றும் 48MP பின்புற கேமரா போன்ற அம்சங்களுடன் வருகின்றன மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyAi Plus Nova 2 Neo 5G மற்றும் Nova 2 Pro 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை
Ai Plus Nova 2 Neo 5G மற்றும் Nova 2 Pro 5G இந்த இரண்டு போனும் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. Ai+ Nova 2 Neo 4GB + 128GB மாடலின் ஆரம்ப விலை ரூ,12,999 ஆகவும், 6GB + 128GB மாடலின் விலை ரூ,13,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Ai+ Nova 2 Pro 6GB + 128GB மாடலின் விலை ரூ,15,999 ஆகவும், 8GB + 128GB மாடலின் விலைரூ,17,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கிய பேங்க் கார்ட்களுக்கு நிறுவனம் ரூ,1,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்டை வழங்குகிறது .

Ai+ Nova 2 Neo 5G சிறப்பம்சம்.
Ai+ Nova 2 Neo 5G போனின் அம்சம் பற்றி பேசினால் 6.74-இன்ச் HD+ டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது. மேலும் இந்த போனில் பவர்புல் பர்போமன்சுக்கு MediaTek Dimensity 6300 சிப்செட் வழங்குகிறது, இதனுடன் இதில் 6GB யின் RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் Android 16, nxtQ OS பிங்கர்ப்ரின்ட் சென்சார் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது .
இதை தவிர இந்த போனில் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை 48MP ப்ரைமரி கேமரா கூடுதலாக போர்ட்ரைட் சென்சார் வாங்கப்படுகிறது மற்றும் இந்த போனின் முன் பக்கத்தில் Ai பவர் கொண்ட 8MP கேமரா உடன் சிறந்த வீடியோ கால் செய்ய முடியும் இதை தவிர இந்த போனில் 6,000mAh பேட்டரியுடன் 18W பாஸ்ட் சார்ஜிங் அம்சம் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க Oppo பிரியரா நீங்க புது போன் வாங்க ஐடியா இருந்தா வெயிட் பண்ணுங்க முதல் முறையாக Trendsetting AI கேமரா
Ai+ Nova 2 Pro 5G சிறப்பம்சம்.
Ai+ Nova 2 Pro 5G, நியோ மாடலுக்கு மேலான நிலையில் உள்ளது மற்றும் மேம்படுத்தப்பட்ட வன்பொருளை வழங்குகிறது. இது 800 நிட்ஸ் பிரகாசத்துடன் கூடிய பெரிய 6.9-அங்குல FHD+ 144Hz LCD ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7100 செயலி ஆற்றலளிக்கிறது, இது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி சேமிப்பகத்தை 2TB வரை அதிகரிக்க முடியும்.
இதன் கேமராக்களில், பின்புறத்தில் 48MP முதன்மை சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைடு சென்சார், மற்றும் முன்புறத்தில் 13MP சென்சார் ஆகியவை அடங்கும். நோவா 2 ப்ரோ 5G, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான nxtQ OS-ஐ வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
