Oppo பிரியரா நீங்க புது போன் வாங்க ஐடியா இருந்தா வெயிட் பண்ணுங்க முதல் முறையாக Trendsetting AI கேமரா
OPPO இந்தியாவில் அதன் புதிய போனை அடுத்த மாதத்தின் ஆரம்பத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது
இந்த போன் OPPO Reno16 சீரிஸ் கீழ் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த போனில் முதல் முறையாக Trendsetting AI கேமரா கொண்டிருக்கும்
OPPO இந்தியாவில் அதன் புதிய போனை அடுத்த மாதத்தின் ஆரம்பத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போன் OPPO Reno16 சீரிஸ் கீழ் அறிமுகப்படுத்தப்படும். மேலும் இந்த போனில் முதல் முறையாக Trendsetting AI கேமரா கொண்டிருக்கும், h 50MP 3.5x டெலிபோட்டோ போர்டரைட் கேமரா போன்ற பல அம்சங்கள் இருக்கிறது மேலும் வெளியிட்டு தேதி மற்றும் பல அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
SurveyOPPO Reno16 சீரிஸ் அறிமுக தேதி
ஒப்போ நிறுவனம் அதன் புதிய OPPO Reno16 சீரிஸ் இந்தியாவில் ஜூலை 2 அன்று அறிமுகமாகும். மேலும் ஒப்போ இந்த போனில் முதல் ட்ரேண்டி கேமரா அம்சங்களை கொண்டுள்ளது மேலும் இது பகல் 12 PM அறிமுகம் செய்யப்படும் இன்-பில்ட் எடிட்டிங் ஸ்டூடியோ போன்ற அம்சங்கள் கொண்டுள்ளது.
The wait for the trendiest device is almost over.
— OPPO India (@OPPOIndia) June 25, 2026
Get ready for the all-new #OPPOReno16Series 🗓️🔥
Launching on 2nd July at 12:00 PM.#OPPORenoLand #LiveInTheMoment #LiveItYourWay pic.twitter.com/y67gaFo1yo
OPPO Reno16 சீரிஸ் Ultra-Clear AI அம்சம் கொண்ட கேமரா வழங்கப்படுகிறது
OPPO Reno16: இதில் 50MP மிகத் தெளிவான ப்ரைம் கேமரா, 50MP மிக வைட் கேமரா மற்றும் 100-டிகிரி வியூவ் என்கிளுடன் கூடிய 50MP மிக வைட் செல்ஃபி கேமரா ஆகியவை உள்ளன. குறைந்த வெளுச்சதிலும் மிக சிறந்த பர்போமன்சை மேம்படுத்த, இந்த அமைப்பு இரட்டை ஃபிளாஷ் சிஸ்டத்தால் சப்போர்ட் செய்கிறது.
OPPO Reno16c: 50MP ப்ரைம் கேமரா, அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 50MP அல்ட்ரா-வைட் செல்ஃபி கேமரா உள்ளிட்ட அதேபோன்ற ஹை ரெசளுசன் அமைப்புடன், டூயல் ஃபிளாஷ் சிஸ்டமும் இதில் உள்ளது.
டெலிபோட்டோ போர்ட்ரைட் கேமரா.
Reno16 சீரிஸ் போனில் ஒரு 50MP 3.5× டெலிபோட்டோ போர்ட்ரைட் கேமரா கொண்டுள்ளது 85mm போர்ட்ரைட் லென்ஸ் கொண்டுள்ளது, ஒரு கிளாசிக் 85mm போர்ட்ரெய்ட் லென்ஸுக்கு இணையான குவிய நீளத்தை வழங்கும் இந்த சென்சார், ஆப்டிகல் ஜூம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தெளிவான, படங்களை வழங்குகிறது. இயற்கையான தோற்றம், பொருள்களைத் தெளிவாகப் பிரித்தல், மற்றும் படத் தரத்தைக் குறைக்காமல் முகத்தின் விவரங்களையும் ஆழத்தையும் எடுத்துக்காட்டும் பின்னணி சுருக்க விளைவு ஆகியவற்றை வழங்கும் வகையில் இந்த சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
AI இயற்கையான டோன் போட்டோ.
OPPO நேச்சுரல் டோன் இமேஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கிரிஸ்டல் கிளியர் இமேஜ், ட்ரூ கலர் மற்றும் விவிட் லைட் ஆகிய மூன்று முக்கிய அளவீடுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த அமைப்பு, வெவ்வேறு சரும நிறங்களின் இயல்பான தன்மையைப் பாதுகாக்கிறது. மல்டி-ஸ்கின்-டோன் அல்காரிதம் ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட சரும நிறத்தையும் பாதுகாக்கிறது. இந்தத் தொடர் வீடியோ பதிவு செய்வதில் மிகவும் சக்தி வாய்ந்தது. அல்ட்ரா-வைட், மெயின் மற்றும் டெலிஃபோட்டோ – அனைத்து லென்ஸ்களும் 4K 6fps HDR வீடியோ பதிவை ஆதரிக்கின்றன. 4K ஆட்டோ ஸ்ட்ரெயிட்டன் மற்றும் ஜூம் ஃப்ரீ வீடியோ போன்ற அம்சங்கள், கையில் வைத்துக்கொண்டு இமேஜ் கிரியேஷன் தொழில்முறைத் தரத்திற்கு உயர்த்துகின்றன.
இதையும் படிங்க:புது போன் வாங்க போறிங்களா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க Samsung கொண்டு வருது புதிய போன்
AI டூல் பயன்படுத்தி ட்ரெண்டின்ங் ஷோட்ஸ்.
ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) மூலம் இயங்கும் க்ரீஎட்டார் டூல்ள்: ColorOS 16, மூன்றாம் தரப்பு ஆப்ளின் தேவையை நீக்கும் பல AI அம்சங்களைக் கொண்டுள்ளது. AI ரீமிக்ஸ் கொலாஜ் (AI Remix Collage), உங்கள் கேலரியில் உள்ள போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் லைவ் போட்டோக்களிலிருந்து அட்மேடிக் கொலாஜ்களை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது. பாப் கேம் (Pop Cam), டிஜிகேம், இன்ஸ்டன்ட் ஃபிலிம், ரெட்ரோ மற்றும் ஏரி போன்ற ஒன்பது அழகியல் முன்னமைவுகளை வழங்குகிறது. பாப்அவுட் 2.0 (Popout 2.0), செல்லப்பிராணிகள், அடையாளச் சின்னங்கள் மற்றும் பொருட்களை அடையாளம் கண்டு, மேம்படுத்தப்பட்ட அனிமேஷன்களை வழங்குகிறது. டூயல்-வியூ வீடியோ 2.0 (Dual-View Video 2.0), முன் மற்றும் பின் கேமராக்களில் ஒரே நேரத்தில் பதிவுசெய்ய உங்களை அனுமதிக்கிறது.
OPPO பபிள் அக்சஸ்ரிஸ் : இந்தத் சீரிஸ் , OPPO பபிள் எனப்படும் எடை குறைந்த (27.5 கிராம்) காந்தத் அக்சஸரிசுடன் அறிமுகப்படுத்தப்படும். இது நிகழ்நேர ஃபிரேமிங் மானிட்டர் மற்றும் ரிமோட் ஷட்டராகச் செயல்பட்டு, ஹை ரெசளுசன் கொண்ட பின்புற கேமரா செல்ஃபிகளை எளிதாக எடுக்க உதவுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
