டூயல் இன்வெர்ட்டர் AC மற்றும் சாதாரண AC யில் இருக்கும் வித்தியாசம் என்ன எது பெஸ்ட்?
சுட்டெரிக்கும் வெயில் காலம் வந்துவிட்டது, இந்த நிலையில் பெரும்பாலான மக்கள் வீட்டிற்க்கு Ac வாங்க வேண்டும் என ஏசியின் டிமாண்ட் அதிகரித்துள்ளது, ஆனால் இப்பொழுது இருக்கும் டெக்னாலஜியில் இன்வெர்ட்டர் AC மற்றும் டூயல் இன்வெர்ட்டர் AC என இருக்கிறது இந்த இரண்டில் இருக்கும் வித்தியாசம் என்ன இதில் எது வாங்கினால் பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த இரண்டு ஏசியில் எது அதிக நாள் நீடித்துளைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.
Surveyடூயல் இன்வெர்ட்டர் AC என்றால் என்ன?
டூயல் இன்வெர்ட்டர் ஏசிகள், சாதாரண ஏசிகளிலிருந்து சற்றே வேறுபட்டவை. டூயல்இன்வெர்ட்டர் ஏசிகளில் இரட்டை ரோட்டரி கம்ப்ரஸர்கள் உள்ளன, அதாவது அவற்றில் இரண்டு கம்ப்ரேசர் சேம்பர் இருக்கின்றன. இது அவற்றுக்கு பாஸ்ட்டான கூலிங் , குறைந்த எலெக்ட்ரிசிட்டி செலவாகும் மற்றும் அமைதியான செயல்பாடு போன்ற பலன்களை அளிக்கிறது.
மேலும், இந்த ஏசி உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அதன் ஸ்பீட் சுழற்சி வேகத்தையும் (RPM) சரிசெய்துகொள்ளும். அதாவது, உங்களுக்குக் கூலிங் குறைவாகத் தேவைப்படும்போது இது மெதுவாகவும், குளிர்ச்சி அதிகமாகத் தேவைப்படும்போது வேகமாகவும் இயங்கும். இந்த மாறும் வேக அம்சம், இதை இன்னும் அதிக ஆற்றல் சேமிப்புத் பவர் கொண்டதாக ஆக்குகிறது.
டுயல் இன்வேர்ட்டார் AC மற்றும் சாதாரண ஏசிக்குக்கும் என்ன வித்தியாசம் ?
டூயல் இன்வெர்ட்டர் ஏசிக்கும் ஒரு சாதாரண ஏசிக்கும் என்ன வித்தியாசம்? மிகப்பெரிய வித்தியாசம் கம்ப்ரசர் செயல்படும் விதத்தில் உள்ளது. ஒரு சாதாரண ஏசியில், கம்ப்ரசர் மீண்டும் மீண்டும் இயங்கி நின்றுவிடும். ரூமின் வெப்பநிலை நிர்ணயிக்கப்பட்ட லிமிட்டை அடைந்தவுடன், அது நின்றுவிடும், பின்னர் வெப்பம் அதிகரிக்கும்போது மீண்டும் இயங்கத் தொடங்கும். இந்தத் தொடர்ச்சியான ஆன் ஆப் சைக்கிளில் , சீரற்ற கூளிங்கை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதிக மின்சாரக் கட்டணத்திற்கும் வழிவகுக்கிறது.
இதையும் படிங்க:இந்தியாவில் முதல் முறையாக Haier தானாக சுத்தம் செய்து கொள்ளும் AC அறிமுகம் செய்துள்ளது 10 செகண்டில் செம்ம கூல்
இரட்டை இன்வெர்ட்டர் ஏர் கண்டிஷனர்கள் சற்றே மாறுபட்ட அணுகுமுறையைக் கையாளுகின்றன. இதில் கம்ப்ரசர் தொடர்ச்சியாக இயங்குகிறது, மேலும் அதன் வேகம் அறை வெப்பநிலைக்கு ஏற்ப சரிசெய்யப்படுகிறது. இதன் பொருள், அதைத் தொடர்ந்து ஆன் மற்றும் ஆஃப் செய்யும் சிரமம் இல்லாமல், உங்களுக்குத் தொடர்ச்சியான குளிர்ச்சி கிடைக்கிறது. இதில் ஒரு இயந்திரவியல் நன்மையும் உள்ளது. இரட்டை ரோட்டரி தொழில்நுட்பம், சுமையை இரண்டு ரோட்டர்களுக்கும் இடையில் பகிர்ந்தளிக்கிறது. அதாவது, வழக்கமான கம்ப்ரசர்களில் இருப்பது போல, முழுச் சுமையும் ஒரே ஒரு ரோட்டரின் மீது மட்டும் விழுவதில்லை. இது, குறிப்பாக வெளியில் வானிலை மிகவும் சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கும்போது, கம்ப்ரசரை மிகவும் திறமையாகச் செயல்பட அனுமதிக்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile