Valentine Day Special release: உங்கள் அன்பானவர்களுடன் பார்த்து என்ஜாய் பண்ணுங்க

Valentine Day Special release: உங்கள் அன்பானவர்களுடன் பார்த்து என்ஜாய் பண்ணுங்க

Valentine Day OTT மற்றும் Theater release movie 2025 : ஒவ்வொரு காதலர்கள் தங்கள் அன்பானவர்களுடன் புதிய பாடம் பார்த்து ஜாலியாக என்ஜாய் பண்ணுவாங்க அந்தவக்யில் இந்த காதலர் தினத்திற்கு தியேட்டர் மற்றும் OTT யில் ரிலீஸ் ஆகும் படங்கள் பற்றி பார்க்கலாம் இந்த லிஸ்ட்டில் ரோமன்ஸ்,த்ரில்லர் மற்றும் காமெடி கலந்த பல திரைப்படங்கள் இருக்கிறது அவை என்ன பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

2K Love Story

  • Release Date: 14th February
  • Platform: தியேட்டர்

சுசீந்திரன் இயக்கத்தில் 2K லவ் ஸ்டோரி படம் வெளியாகிறது தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படம், இதில் ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதன் இசையமைப்பாளர் டி. இமான் ஆகும் இந்தப் படம் ஒரு பையனுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஆழமான, சாதாரணமான பிணைப்பை ஆராய்கிறது, காதல் மற்றும் திருமணம் குறித்த சமூக எதிர்பார்ப்புகளை சவால் செய்கிறது.

Kaadhal Enbadhu Podhu Udamai

  • Release Date: 14th February
  • Platform: தியேட்டர்

காதல் என்பது பொது உடமை இது ஒரு த்தமிழ் ரொமண்டிக் திரைப்படமாகும் இது இயக்குனர் ஜெயப்ரகாஷ் ராதக்ரிஷ்ணன் இயக்கத்தில் வெளியாகிறது இது இது இரண்டு பெண்களுக்கு இடையேயான வளர்ந்து வரும் காதல் கதையை ஆராய்கிறது, இந்த படம் அவர்களின் சவால்களை எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக அவர்களின் குடும்பங்களின் ஒப்புதலைப் பெறுவதில், அதே நேரத்தில் சமூக எதிர்பார்ப்புகளை வழிநடத்துகிறது.

Badava

  • Release Date: 14th February
  • Platform: தியேட்டர்
  • Cast: விமல், சூரி, ஸ்ரீதா ராவ், கேஜிஎஃப் ராம்

படவா இயக்குனர் KV நந்தா இயக்கத்தில் வெளியாகும் ஒரு ஏக்ஷன் திரைப்படமாகும் இதில் சூரி மற்றும் விமல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள் மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் சயமைப்பாளர் John petar ஆகும் கீழ் John Studios பேனர் கீழ் வெளியிடப்பட்டுள்ளது இது பிப்ரவரி 14 அன்று தியேட்டரில் வெளியாகும்.

Otha Votu Muthaiya

  • Release Date: 14th February
  • Platform: தியேட்டர்

ஒத்த வோட்டு முத்தையா என்பது சாய் ராஜ கோபால் இயக்கத்தில் வெளியாகும், இதில் கவுண்டமணி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை எதிர்கொள்ளும் அரசியல்வாதியான முத்தையா, இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் தனது இடத்தைப் பெறுவதைப் பின்தொடர்கிறது இந்தப் படம். வலுவான நடிப்புகள் மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சிகளுடன், இந்த படத்தில் சித்தார்த் விபின் இசையும், எஸ்.ஏ. காத்தவராயன் ஒளிப்பதிவும் இடம்பெற்றுள்ளன.

Fire

  • Release Date: 14th February
  • Platform: தியேட்டர்

ஜே.எஸ்.கே எழுதி இயக்கிய ‘ஃபயர்’ ஒரு பரபரப்பான தமிழ் க்ரைம் திரில்லர். பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சிங்கம்புலி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷனின் கீழ் ஜே.எஸ்.கே சதீஷ் குமார் தயாரித்த இந்தப் படத்தில் டி.கே இசையமைத்துள்ளார். சதீஷ் ஜி அற்புதமான ஒளிப்பதிவு செய்துள்ளார். சி.எஸ். பிரேம் குமாரின் தீவிர படத்தொகுப்புடன், “ஃபயர்” பார்வையாளர்களை கவரும் இருண்ட, சிலிர்ப்பூட்டும் கருப்பொருள்களை ஆராய்கிறது. சஸ்பென்ஸ், குற்றம் மற்றும் நாடகத்தின் சரியான கலவையான இது, மறக்க முடியாத சினிமா அனுபவத்தை உறுதியளிக்கிறது

Madurai Paiyanum Chennai Ponnum

  • பிளாட்பாரம் : Aha
  • ரிலீஸ் தேதி: பிப்ரவரி 14
  • நடிகர்கள்: கண்ணா ரவி, அஞ்சலீன் பி, சாஹியாரா ஷர்மா, குரேஷி

இந்த திரைப்படத்தை பற்றி பேசினால் இதுவும் ஒரு ரொமண்டிக் காதல் கதையாகும் மேலும் நீங்கள் இந்த காதலர் தினத்திற்கு இந்த படத்தை சிறப்பாக பார்க்க முடியும் மேலும் இந்த படத்தில் சென்னை மற்றும் மதுரையை பார்க்காதவர் ஸ்க்ரீனில் பார்க்க முடியும்.

இதையும் படிங்க: Friday movies: இன்று OTT மற்றும் தியேட்டர் ரிலிஸ் மூவீ அதில் சாய்பல்லவி தண்டேல் முதல்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo