NPCI Call Merging Scam: UPI கஸ்டமருக்கு எச்சர்க்கை மொத்த பணமும் அபேஸ் ஆகும் பெரும் ஆபத்து

NPCI Call Merging Scam: UPI கஸ்டமருக்கு எச்சர்க்கை மொத்த பணமும் அபேஸ் ஆகும் பெரும் ஆபத்து

National Payments Corporation of India (NPCI) அதன் UPI கஸ்டமர்களுக்கு மிக பெரிய எச்சர்க்கையை கொண்டு வந்துள்ளது, அதாவது சமிபத்தில் சைபர் கிரிமினல்கள் ஒரு புதிய மோசடி Call Merging Scam நடந்து வருகிறது, அதாவது இதில் மோசடி செய்பவர்கள் கால் மெர்ஜிங் முறையைப் பயன்படுத்தி மக்களிடமிருந்து OTP (ஒனடைம் பாஸ்வர்ட்) திருடி அவர்களின் பம்ன்க் அக்கவுன்டிலிருந்து பணத்தை எடுக்கின்றனர். இந்த மோசடி குறித்து இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மோசடியில் ஒரு அநாமதேய அழைப்பைப் பெறுவது அடங்கும், அதில் மோசடி செய்பவர் தெரியாத எண்ணிலிருந்து அழைத்து, உங்கள் நண்பர்களில் ஒருவரிடமிருந்து உங்கள் எண்ணைப் பெற்றதாகக் கூறுகிறார். உங்கள் நண்பர் வேறொரு எண்ணிலிருந்து அழைக்கிறார் என்றும், கால்களை மெர்ஜ்செய்ய சொல்கிறார் என்றும் அவர் உங்களிடம் கூறுகிறார். NCPI, அதாவது UPI சேவையை உருவாக்கியவர் வழங்கிய எச்சரிக்கை மற்றும் இந்த மோசடி எவ்வாறு நடக்கிறது என்பது தொடர்பான அனைத்து தகவல்களையும் பார்ர்க்கலாம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

NPCI யின் அதிகாரபூர்வ எச்சரிக்கை.

அதன் அதிகாரபூர்வ X பக்கத்தில் UPI_NPCI இதை பற்றிய எச்சரிக்கையை கொடுத்துள்ளது, இந்த மோசடி குறித்து NCPI மக்களுக்கும் தகவல் அளித்துள்ளது. மேலும், இது குறித்து மக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். டிஜிட்டல் முறையில் மக்களிடமிருந்து பணம் பறிக்க மோசடி செய்பவர்கள் ஒரு புதிய முறையைப் பின்பற்றுகிறார்கள் என்று UPI அதன் X கைப்பிடியில் தெரிவித்துள்ளது . அவர்கள் கல மெர்ஜிங் சேவையைப் பயன்படுத்துகிறார்கள். இந்த மோசடி எவ்வாறு நடக்கிறது, அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதையும் UPI தனது பதிவில் விளக்கியுள்ளது.

Call Merging ஸ்கேம் என்றாள் என்ன ?

NPCI யின் படி, ஸ்கேமர் ஒரு லைவ் கால் அல்லது ஜோப் இண்டர்வியுவ் என்ற பெயரில் தனிநபர்களை கால் செய்யும்போது இந்த மோசடி வெளிப்படுகிறது. அவர்கள் அந்த நபரின் நம்பரை ஒரு பரஸ்பர நண்பரிடமிருந்து செய்வதாக கூறி, காலின் போது, ​​அந்த நபரை வேறொரு நம்பருடன், நண்பரிடமிருந்து வந்ததாகக் கூறி இணைக்கச் சொல்கிறார்கள்.

உண்மையில், இந்த இரண்டாவது கால் பேங்கிலிருந்து வரும் OTP கால் ஆகும் , கால்கள் இணைக்கப்பட்டவுடன் மோசடி செய்பவர் அதைக் கேட்க முடியும். இதன் விளைவாக, குற்றவாளி பாதிக்கப்பட்டவரின் OTP-ஐ அணுகி, நிதியைத் திருட அனுமதிக்கும். இந்த மோசடி மிகவும் ஆபத்தானது, ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணம் எடுக்கப்பட்ட பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள்.

பயனர்கள் இரண்டு முக்கிய வழிகளில் OTPகளைப் பெறுகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்: SMS அல்லது ஈமெயில் அல்லது போன் கால் மூலம். ஒரு பயனர் தங்கள் OTP-ஐ காலின் மூலம் கேட்கத் தேர்வுசெய்தால், மோசடி செய்பவர்கள் இந்தத் தகவலை எளிதாகப் பிடிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

Call Merging ஸ்கேமிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

  • தெரியாத காலர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்: தெரியாத நபருடன் கால்களை மெர்ஜ் செய்ய வேண்டாம், குறிப்பாக அவர் அல்லது அவள் கால்களை இணைக்கக் கூறினால் .
  • காலர்களின் அடையாளத்தைச் சரிபார்க்கவும்: யாராவது உங்கள் பேங்க் பிரதிநிதி அல்லது அறிமுகமானவர் என்று கூறினால், அவரது அடையாளத்தைச் சரிபார்க்கவும்.
  • தேவையற்ற OTP-யைப் புகாரளிக்கவும்: நீங்கள் தொடங்காத ஒரு பரிவர்த்தனைக்கு OTP-யைப் பெற்றால், உடனடியாக 1930 என்ற ந்மபருக்கு கால் செய்து அதைப் புகாரளிக்கவும்.

இதையும் படிங்க:Fastag புதிய விதி மாறியது ப்ளாக்லிஸ்டிங் மற்றும் பேலன்ஸ் சிக்கலை எப்படி சரி பார்ப்பது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo