Oppo A77s ஸ்மார்ட்போன் இந்தியாவில் 5000mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் அறிமுகம்.

Oppo A77s ஸ்மார்ட்போன் இந்தியாவில்  5000mAh பேட்டரி மற்றும்  50MP கேமராவுடன் அறிமுகம்.
HIGHLIGHTS

Oppo கம்பெனியின் புதிய ஸ்மார்ட்போன் Oppo A77s இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Oppo A77s ஸ்மார்ட்போன் 8GB ரேம் சப்போர்ட் உடன் வருகிறது

Oppo A77s ஸ்மார்ட்போன் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

Oppo கம்பெனியின் புதிய ஸ்மார்ட்போன் Oppo A77s இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போன் Snapdragon 480 SoC ப்ரோசிஸோர் சப்போர்ட் உடன் வருகிறது. Oppo A77s ஸ்மார்ட்போன் 8GB ரேம் சப்போர்ட் உடன் வருகிறது. இதில் 6.56 இன்ச் LCD டிஸ்ப்ளே உள்ளது. இதன் ஸ்கிரீன் ரிபெரேஸ் ரேட் 90Hz ஆகும். 50MP AI டூவல் கேமரா செட்அப் கொடுக்கப்பட்டுள்ளது. பவர் பேக்கப்பிற்காக, போனில் 5,000mAh பேட்டரி உள்ளது, இது 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது. Oppo A77s ஸ்மார்ட்போன் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

Oppo A77s யின் விலை 

 

Oppo A77s ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999. போன் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் விருப்பத்தில் வருகிறது. நீங்கள் அதை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயன்முறையில் வாங்க முடியும். டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் கிடைக்கும் இந்த போனை வாங்கும் போது 10 சதவீத கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது.

Oppo A77s யின் ஸ்பெசிபிகேஷன்

Oppo A77s ஸ்மார்ட்போன் டூயல் சிம் (Nano) சப்போர்ட் உடன் வருகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ColorOS 12.1 இல் வேலை செய்கிறது, இந்த போனில் 6.56 இன்ச் HD + LCD டிஸ்ப்ளே உள்ளது. இதன் ஸ்கிரீன் ரிபெரேஸ் ரேட் 90Hz ஆகும். ஸ்னாப்டிராகன் 680 போனில் ப்ரோசிஸோர் சப்போர்டகா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 8GB LPDDR4x ரேம் உடன் வருகிறது. 

 

கேமரா

Oppo A77s ஸ்மார்ட்போன் டூவல் கேமரா செட்அப் உடன் வருகிறது. இதன் பிரைமரி கேமரா 50MP ஆகும். இது தவிர 2MB மோனோக்ரோம் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர 8MB செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஒப்போ ஸ்மார்ட்போனில் 128GB உள்ளடங்கிய ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. போன் மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் உடன் வருகிறது. கனெக்ட்டிவிட்டிற்கு, போனில் டூயல் பேண்ட் வைபை, புளூடூத் v5.0 மற்றும் USB டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் சப்போர்ட் உள்ளது. 

 பேட்டரி

Oppo A77s ஸ்மார்ட்போனில் பயோமெட்ரிக் பிங்கர் சென்சார் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 33W SuperVooc சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ள போனில் 5,000mAh பேட்டரி சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo