HIGHLIGHTS
சோனி நிறுவனத்தின் WF-H800 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது
இந்த இயர்பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 16 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.
சோனி நிறுவனத்தின் WF-H800 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இயர்பட்ஸ் சோனியின் டிரை-ஹோல்டு ஸ்டிரக்சர், சோனி டிஜிட்டல் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட் என்ஜின், நீண்ட பேட்டரி லைஃப், ஆட்டோமேடிக் பிளே/பாஸ் மற்றும் பல்வேறு அம்சங்கள் கொண்டிருக்கிறது.
Surveyஇத்துடன் சோனி WF-H800 மாடலில் கூகுள் அசிஸ்டண்ட், அலெக்சா மற்றும் சிரி போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகளை கொண்டுள்ளது. இது பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய இயர்பட்ஸ் 6 எம்எம் டோம்-டைப் டிரைவர்களை கொண்டு இயங்குகிறது. இத்துடன் ப்ளூடூத் 5 மற்றும் புதிய ப்ளூடூத் சிப் கொண்டுள்ளது. இவை சீரான ஆடியோ அனுபவத்தை குறைந்த லேடென்சியில் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 16 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.
மேலும் இதில் க்விக் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 70 நிமிடங்களுக்கு பயன்படுத்த முடியும். இதில் இயர் டிடெக்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இயர்போனை அணிந்து கொண்டால் தானாக ஆன் ஆகும். பின் காதில் இருந்து கழற்றினால் தானாக ஆப் ஆகிவிடும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile