இனி சிம் இல்லாமல் WhatsApp பயன்படுத்த முடியாது பெரிய குண்ட தூக்கி போட்ட அரசு

இனி சிம் இல்லாமல் WhatsApp பயன்படுத்த முடியாது பெரிய குண்ட தூக்கி போட்ட அரசு

இந்திய அரசு WhatsApp, Telegram, Signal போன்ற மெசேஜிங் ஆப்களுக்கு மிக பெரிய சைபர்செக்யூரிட்டியின் படி புதிய விதியை விதித்துள்ளது. அதாவது இனி இந்த ஆப் பயன்படுத்துவதற்க்கு போனில் நீங்கள் எந்த நம்பரில் இருந்து ரெஜிஸ்டர் செய்திர்களோ அதே SIM இருக்க வேண்டியது அவசியமாகும், நீங்கள் அந்த போனில் இருந்தால் சிம் எடுத்திட்டால் அது உடனே வேலை செய்து அதாவது சேட் போன்றவற்றை எதையும் செய்ய முடியாது, இந்த அதிரடி முடிவுக்கு காரணம் தொடர்ந்து சைபர் பிராட் அதிகப்பதனால் இந்த கொண்டு வந்ததாக DoT கூறுகிறது மேலும் இந்த புதிய விதியானது பிப்ரவரி 2026 நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என கூறியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

SIM எடுத்தவுடன் உங்கள் WhatsApp வேலை செய்யது

DoT யின் படி Telecommunication Cybersecurity Amendment Rules 2025 யின் கீழ் WhatsApp, Telegram, Signal மற்றும் எந்த ஒரு சேட் ஆப்பிளும் இனி தொடர்ந்து SIM இருப்பது அவசியமாகும் நீங்கள் சிம்மை அகற்றியவுடன் ஆப் செயலில் இருக்காது. தற்போது, ​​OTP மூலம் எண்களைச் சரிபார்க்கும் செயலிகள், சிம் அகற்றப்பட்ட பிறகும் நீண்ட நேரம் தொடர்ந்து செயல்படும் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெகிழ்வுத்தன்மை, தங்கள் அடையாளங்களை மறைக்க அடிக்கடி சிம்களை மாற்றும் சைபர் குற்றவாளிகளுக்கு பயனளிக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது.

இதையும் படிங்க Jio யின் வெறும் ரூ,200க்குள் 90 நாட்கள் வரை JioHotstar நன்மை இனி டேட்டா OTT ஒரே கல்லில் 2 மாங்காய்

நீங்கள் வெப் சர்வரில் பயன்படுத்தினால் 6 மணி நேரத்திற்குள் ஆட்டோ லோக்அவுட் ஆகிவிடும்.

நாமமும் பலர் WhatsApp Web, Telegram Web அல்லது எந்த ஒரு சேட் சேவையையும் வெப்பில் அதாவது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பயன்படுத்துபோது தற்பொழுது வந்த புதிய விதியின்படி இந்த சேட் சேவை 6 மணி நேரத்திற்குள் தானாகவே லோக்அவுட் ஆகிவிடும் ஆப்படி ஆகும்போது நீங்கள் மீம்டும் மீண்டும் QR கோட் மூலம் லாகின் செய்ய வேண்டும் , தற்பொழுது வரை WhatsApp Web சேவையானது நீங்கள் தொடர்ந்து 14 நாட்கள் பயன்படுத்தாமல் மட்டுமே லோக்ஆவுட் ஆகும், இணையத்திலிருந்து கண்டுபிடிக்க முடியாத உள்நுழைவு செயல்பாடு, சைபர் குற்றவாளிகள் இந்தியாவிற்கு வெளியே இருந்து கூட மோசடி செய்ய வாய்ப்பளிக்கிறது என்று அரசாங்கம் கூறுகிறது, இந்த புதிய விதி இதை நிறுத்த முயற்சிக்கும்.

அரசு இந்த புதிய விதியை கொண்டு வர காரணம் என்ன?

மெசேஜிங் ஆப்க்கான ஒருமுறை வெரிபிகேஷன் மாதிரி குறிப்பிடத்தக்க பாதுகாப்பு இடைவெளியை உருவாக்குவதாக DoT மற்றும் COAI தெரிவித்தன. குற்றவாளிகள் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட எண்களை வெளிநாடுகளுக்கு நகர்த்துவதன் மூலமோ அல்லது இணைய அழைப்பு முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமோ ஏமாற்றலாம், மேலும் சிம் செயலற்ற நிலையில் இருக்கும்போது கூட செயலியுடன் இணைந்திருக்கலாம். அழைப்பு பதிவுகள், இருப்பிடம் மற்றும் நெட்வொர்க் தரவு ஆகியவை சிம்முடன் இணைக்கப்படாததால், இதைக் கண்டறிவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. தொடர்ச்சியான சிம்-பிணைப்பு, பயனர், எண் மற்றும் சாதனம் இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்த அரசாங்கத்திற்கு உதவும், இது மோசடி மற்றும் ஸ்பேம் இரண்டையும் குறைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo