Jio யின் அத்தனை பல நன்மை வழங்கும் திட்டத்தை தூக்கி மக்களுக்கு மிக பெரிய ஷாக்
தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் ரூ,249 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை சத்தமில்லாமல் நீக்கியுள்ளது அதாவது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி உஅடன் தினமும் 1GB டேட்டா நன்மை வழங்கியது இனி இந்த திட்டம் இருக்காது என்பது வருத்தத்துக்குரியது ஆகும், இருப்பினும் மற்ற 1GB டேட்டா நன்மையில் வரும் சில திட்டங்கள் இன்னும் செயலில் இருக்கிறது இதில் ரூ, 189, ரூ,198, மற்றும் ரூ,239 யில் வரும் திட்டம் ஆகும் இருப்பினும் இந்த திட்டம் குறைந்த வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இதன் நன்மை என்ன என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.
SurveyJio ரூ,249 யில் வரும் திட்டத்தின் நன்மை.
Jio ரூ,249 யில் வரும் திட்டத்தின் நன்மை பற்றி பேசினால் இதில் தினமும் 1GB டேட்டா உடன் இதில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது , ஆனால் முன்பு இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா வழங்கப்பட்டது ஆனால் அதன் பிறகு இதன் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது.
ஜியோவின் நெட்வொர்க்குகளின் மொத்த டேட்டா நுகர்வு கணிசமாக வளர்ந்திருந்தாலும், 5G டேட்டா நுகர்வு காரணமாக இது நடந்துள்ளது. குறைந்த பட்ச 4G பயனர்கள் போதுமான அளவு டேட்டா மற்றும் வேலிடிட்டியாகும் தன்மைக்காக ரூ.249 திட்டத்தை ரீசார்ஜ் செய்திருக்கலாம். இது ஜியோவின் சராசரி வருவாய் ஒரு பயனருக்கு (ARPU) வளர்ச்சியைத் தடுக்கும். எனவே, டெலிகாம் ஆபரேட்டர் இந்த அடிப்படையில் திட்டத்தை நீக்க முடிவு செய்திருக்கலாம்.
இதையும் படிங்க :BSNL கஸ்டமர்களுக்கு ஜாக்பாட் ஆபர் இந்த திட்டத்தில் அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்
இந்த நடவடிக்கை, Q2 FY25 இல் ஜியோவின் ARPU-வை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், இப்போது பயனர்கள் அடிக்கடி ரீசார்ஜ்களைச் செய்வார்கள், இதன் விளைவாக அதிக உயர் வருவாய் கிடைக்கும், அல்லது அவர்கள் அதிக மதிப்புள்ள திட்டங்களுக்குச் செல்லக்கூடும், இதன் விளைவாக மீண்டும் அதிக வருவாய் கிடைக்கும். ஜியோ விரைவில் IPO (ஆரம்ப பொது வழங்கல்) க்கு செல்ல திட்டமிட்டுள்ளதால், அதன் ARPU-வை மேலும் மேம்படுத்த விரும்புகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile