Airtel vs Jio vs BSNL இண்டர்நேஷனல் ரோமிங் திட்டத்தில் எது பெஸ்ட்

Airtel vs Jio vs BSNL இண்டர்நேஷனல் ரோமிங் திட்டத்தில் எது பெஸ்ட்

Airtel, Jio, மற்றும் BSNL இந்த மூன்று நிறுவனங்களும் இண்டர்நேஷனல் ரோமிங் திட்டத்தை தனது இந்திய கஸ்டமர்களுக்கு வழங்குகிறது இந்த திட்டமானது மக்கள் வெளியில் செல்லும்போது தனது குடும்பம் மற்றும் அன்பானவர்களிடம் தொடர்பில் இருக்க முடியும். மேலும் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைப்பில் இருக்க உங்களின் சிம் எக்டிவில் வைக்க உதவும், மேலும் Airtel, Jio மற்றும் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,2000க்குள் இண்டர்நேஷனல் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த மூன்று நிறுவங்களின் திட்டத்தை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel இண்டர்நேஷனல் ரோமிங் திட்டம்.

ஏர்டெல் பல திட்டங்களில் டேட்டா, காலிங் SMS போன்ற பல நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தின் விலை ரூ,1,098 திட்டத்தில் 3GB யின் டேட்டா உடன் 200 நிமிட காலிங் மற்றும் 20 SMS நன்மையுடன் இதன் வேலிடிட்டி 10 நாட்களுக்கு இருக்கும். இதை தவிர இதில் ரூ,798 யில் திட்டமும் இருக்கிறது இதில் 2GB டேட்டா உடன் 150 நிமிடம் லோக்கல் மற்றும் இந்தியா காலிங் மற்றும் 20 SMS வழங்குகிறது மேலும் இது 5 நாட்களுக்கு மட்டுமே இருக்கும்,, இந்த திட்டமானது அமேரிக்கா,ஐரோப்பா, வளைகுடா (Gulf) மற்றும் ஆசியா மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு அடிகடி பரப்பவர்களுக்கு பொருந்து, இதை தவிர நீங்க ஒரு நீண்ட நாட்களுக்கு போறிங்கனா இதன் வருடாந்திர திட்டம் ரூ,2,997 உடன் 2GB யின் டேட்டா 100 நிமிட காலிங் வசதியுடன் வரும் இதன் வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருக்கும்.

இதையும் படிங்க Jio,Airtel மற்றும் VI யின் ரூ,189 வரும் இந்த திட்டத்தில் எது பக்கா மாஸ்?

Jio இண்டர்நேஷனல் ரோமிங் திட்டம்.

ஜியோவின் இண்டர்நேஷனல் ரோமிங் திட்டத்தின் ஆரம்ப விலை ரூ,499 உடன் 250MB டேட்டா மற்றும் 100 நிமிட காலிங் ஆனால் இது 1 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி இருக்கும்.மேலும் டேட்டா லிமிட் திட்டத்தை பற்றி பார்த்தால் அவர்களுக்கு ரூ,1,499 யில் வரும் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் இதில் 100 நிமிட காலிங், 2GB யின் ஹை ஸ்பீட் டேட்டா மற்றும் 100 SMS உடன் இது 14 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது.

BSNL இண்டர்நேஷனல் ரோமிங் திட்டம்.

BSNL இந்த திட்டமானது இண்டர்நேஷனல் ரோமிங் திட்டம் பல நாடுகளில் பரவலாக விளம்பரப்படுத்தப்படவில்லை அல்லது கிடைக்கவில்லை என்றாலும், அது இன்னும் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. டெல்கோ ரூ.1,799 சர்வதேச ரோமிங் திட்டத்தை வழங்குகிறது, இது 18 நாடுகளுக்கு 1GB டேட்டா பேக், 10 நிமிட டாக்டைம் மற்றும் SMS ஆகியவற்றை 7 நாட்கள் வேலிடிட்டி வகையில் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo