WhatsApp யில் அசத்தலான கேஷ்பேக் ஆபர், பேமண்ட் பண்ணுங்க கேஷ்பேக் பெறுங்கள்.

HIGHLIGHTS

வாட்ஸ்அப் இந்தியாவில் UPI அடிப்படையிலான டிஜிட்டல் கட்டணச் சேவையை இரண்டு-மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது

WhatsApp Payments அதிகாரப்பூர்வமாக 2021 இல் தொடங்கியது.

அதாவது மொத்தம் ரூ.33 கேஷ்பேக் கிடைக்கும்.

WhatsApp  யில் அசத்தலான கேஷ்பேக் ஆபர், பேமண்ட் பண்ணுங்க கேஷ்பேக் பெறுங்கள்.

வாட்ஸ்அப் இந்தியாவில் UPI அடிப்படையிலான டிஜிட்டல் கட்டணச் சேவையை இரண்டு-மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது, இருப்பினும் WhatsApp Payments அதிகாரப்பூர்வமாக 2021 இல் தொடங்கியது. ஆரம்பத்திலும் நிறுவனம் கேஷ்பேக் சலுகையை அறிவித்தது, தற்போது மீண்டும் நிறுவனம் கேஷ்பேக் அறிவித்துள்ளது. ஒரு அறிக்கையின்படி, ஒவ்வொரு முறையும் வாட்ஸ்அப்பின் UPI மூலம் நீங்கள் மூன்று வெவ்வேறு கான்டெக்ட்களும் பணம் அனுப்பும்போது, ​​நீங்கள் ரூ.11 வரை கேஷ்பேக் கிடைக்கும் , அதாவது மொத்தம் ரூ.33 கேஷ்பேக் கிடைக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களிடம் ஒரு சேவையை பயன்படுத்த வைக்க அசத்தலான யுக்தியை கையாள முடிவு செய்துள்ளது. அதன்படி அதிகாரப்பூர்வ காப்பரேட் சப்போர்ட் வலைப்பக்கத்தில் கேஷ்பேக் பற்றிய தகவல் இடம்பெற்று இருக்கிறது. வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு பயனர்களுக்கு மூன்று முறை பணம் அனுப்பினால், ரூ. 11 வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் பேமண்ட் சேவையை 100 மில்லியன் பயனர்களுக்கு நீட்டிக்க இந்திய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதை அடுத்து, வாட்ஸ்அப் நிறுவனம் கேஷ்பேக் சலுகையை அறிவித்து இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு முதல் பேமண்ட் சேவையை வழங்க வாட்ஸ்அப் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

குறைந்தபட்சம் 30 நாட்களாக பேமண்ட் சேவையை பயன்படுத்தி வருவோருக்கு மட்டும் இந்த சலுகையை வாட்ஸ்அப் முதற்கட்டமாக வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் கேஷ்பேக் ரிவார்டுகளை வழங்குவதற்கான சோதனையை வாட்ஸ்அப் இந்தியாவில் நடத்தியது.

கேஷ்பேக் சலுகையின் மூலம் வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் மொபைல் பேமண்ட் சந்தையில் ஆழமாக கால்பதிக்க முடியும். இந்த சந்தையில் தற்போது கூகுள் பே மற்றும் வால்மார்ட் நிறுவனத்தின் போன்பெ போன்ற சேவைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile