10,000mAh பேட்டரியுடன் மிட் ரேன்ஜ் பிரிவில் Vivo S2 FE அறிமுகம் விலை என்ன பாருங்க

HIGHLIGHTS

விவோ இந்தியாவில் அடுத்த Vivo S2 FE போனை அறிமுகம் செய்துள்ளது

இந்த போனில் 10,000mAh பேட்டரியுடன் 44W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

10,000mAh பேட்டரியுடன் மிட் ரேன்ஜ் பிரிவில் Vivo S2 FE அறிமுகம் விலை என்ன பாருங்க

விவோ இந்தியாவில் அடுத்த Vivo S2 FE போனை அறிமுகம் செய்துள்ளது . இதில் மிக சிறப்பு என்னவென்றால் இது மிட் ரேன்ஜ் பிரிவில் இருந்தாலும் இந்த போனில் 10,000mAh பேட்டரியுடன் 44W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் இந்த போனில் MediaTek Dimensity 7300e 5G வழங்குகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo S2 FE விலை தகவல்

Vivo S2 FE-இன் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் பவர் கொண்ட மாடலின் விலை ரூ. 38,999 ஆகும். இதன் ஹை எண்டு 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் பவர் கொண்ட வேர்ஷனின் விலை ரூ. 42,999 ஆகும். இந்த புதிய போன் ஸ்டெல்லர் கிரீன் (Stellar Green), டைட்டன் பிளாக் (Titan Black) மற்றும் ஜென் வைட் (Zen White) ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இது அக்டோபர் 20 முதல் Flipkart, Vivo India வெப்சைட் மற்றும் பிற விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனைக்கு வரும்.

Vivo S2 FE சிறப்பம்சம்.

Vivo S2 FE போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.83-இன்ச் 1.5K (1,260X2,800 பிக்சல்கள்) AMOLED Q10+ டிஸ்ப்ளே உடன் இதில் இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 449 ppi பிக்சல் டென்சிட்டி கூடிய உள்ளது. இந்த பேனல் HBM (அதிக ப்ரைட்னஸ் மோட ) நிலையில் 2000 நிட்ஸ் வரை ஹை ப்ரைட்னஸ் வழங்கும் பவர் கொண்டுள்ளது.

இதில் ஆக்டா-கோர் 6nm மீடியாடெக் டைமென்சிட்டி 7300e 5G சிப்செட் உள்ளது, மேலும் இது 8GB வரை LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.2 உள்ளக ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட விவோவின் சமீபத்திய ஆரிஜின்ஓஎஸ் 6-யில் இயங்குகிறது.

கேமராக்களைப் பொறுத்தவரை, விவோ S2 FE ஆனது, 50 மெகாபிக்சல் சோனி IMX852 முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை போக்கே கேமரா ஆகியவற்றைக் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக இதில் 32 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் இது IP68 + IP69 ரேட்டிங்கை கொண்டுள்ளது. தெர்மல் மேனேஜ்மென்ட் உடன் இந்த போனில் 3800 சதுர மிமீ வேப்பர் சேம்பர் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க:7200mAh பேட்டரி மற்றும் 50MP ZEISS OIS மெயின் கேமரா உடன் Vivo V80 ஸ்மார்ட்போன் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க

விவோ S2 FE, 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 10,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி, ஒரே சார்ஜில் 68 மணிநேரம் வரை அழைப்பு நேரத்தையும், 30 மணிநேரம் வரை டிக்டாக் பிளேபேக்கையும் வழங்கும் என்று கூறப்படுகிறது. இதன் பரிமாணங்கள் 163.9×76.5×8.69 mm மற்றும் எடை சுமார் 225 கிராம் ஆகும். இரட்டை சிம் (நானோ) வழங்கப்படுகிறது.

விவோ S2 FE கனெக்ஷன் வசதிக்காக 5G, Wi-Fi, புளூடூத் 5.4, USB டைப்-C, OTG, GPS, BeiDou, GLONASS, GALILEO மற்றும் QZSS ஆகியவற்றை ஆதரிக்கிறது. இதில் உள்ள சென்சார்களில் ஆக்சிலரோமீட்டர், சுற்றுப்புற ஒளி சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-காம்பஸ் மற்றும் கைரோஸ்கோப் ஆகியவை அடங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile