இன்ஸ்டன்ட் மெசேஜிங் தலமான வாட்ஸ்அப்பில் விரைவில் மற்றொரு புதிய அம்சத்தைப் கொண்டு வர போகிறது. வாட்ஸ்அப்பின் இந்த அம்சத்தின் உதவியுடன், வாட்ஸ்அப் சேட்லேயே தட்டுவதன் மூலம் மற்ற பயனர்களின் ஸ்டேட்டஸ் பார்க்க முடியும். வாட்ஸ்அப் இன்னும் இந்த அம்சத்தை வெளியிடவில்லை என்றாலும். வாட்ஸ்அப்பின் இந்த அம்சம் டெவலப்மெண்ட் பயன்முறையில் உள்ளது மற்றும் அதன் பீட்டா சோதனை செய்யப்படுகிறது. விரைவில் இந்த அம்சம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், வாட்ஸ்அப் பயனர்கள் இனி சேட்டின் ஸ்கிரீன் ஷாட்களை எடுக்க முடியாது என்று அறிவித்தார்.
இந்த அம்சம் தற்போது ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.வாட்ஸ்அப் ஐஓஎஸ் பீட்டா 22.18.0.70 வெர்ஷனில் ஸ்டேட்டஸ் அப்டேட்களை சாட் லிஸ்ட்டில் இருந்தே நேரடியாக பார்க்க வழி செய்கிறது. இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை பயன்படுத்தி ஸ்டோரிஸ் போன்றே புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவைகளை 24 மணி நேரத்தில் மறையும் வகையில் செட் செய்து கொள்ளலாம்.
இது தவிர சாட்டில் இருந்து அழிக்கப்பட்ட குறுந்தகவலை மீண்டும் பெற செய்யும் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மிக முக்கிய உரையாடலின் போது தவறுதலாக மெசேஜை அழித்து விட்டால் அதனை இந்த அம்சம் கொண்டு மீண்டும் பெற முடியும்.
இந்த அப்டேட் சாட் லிஸ்ட் ஓரத்தில் ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டு இருப்பதை காண்பிக்கும். இந்த அம்சம் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தி வரும் சில பயனர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற பீட்டா பயனர்களுக்கு விரைவில் வழங்கப்பட்டு அதன் பின் தான் அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்பட உள்ளது.