NoiseFit Evolve 3 ஸ்மார்ட்வாட்ச் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களுடன் அறிமுகம்.

Updated on 29-Sep-2022
HIGHLIGHTS

நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

நாய்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த எவால்வ் 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்

மொத்தமாக 150-க்கும் அதிக வாட்ச் பேஸ்களை கொண்டிருக்கிறது.

நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது நாய்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த எவால்வ் 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 466×466 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 150-க்கும் அதிக வாட்ச் பேஸ்களை கொண்டிருக்கிறது.

விலை தகவல்

இந்திய சந்தையில் புதிய நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச் விண்டேஜ் பிரவுன், கார்பன் பிளாக், ஸ்பேஸ் புளூ மற்றும் சில்வர் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச்

இந்த ஸ்மார்ட்வாட்ச் மெட்டாலிக் யுனிபாடி மற்றும் இரண்டு பட்டன்களை கொண்டிருக்கிறது. இத்துடன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. நாய்ஸ்பிட் எவால்வ் 3 மாடலில் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்டிரெஸ் மற்றும் ஸ்லீப் டிராக்கர் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது.

நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச்-இல் பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மியூசிக், கேமரா கண்ட்ரோல், சமூக வலைதள நோட்டிபிகேஷ்கள், வேக் ஜெஸ்ட்யுர், ஸ்மார்ட் DND போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் 300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. நாய்ஸ்பிட் எவால்வ் 3 ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்கள் வரை பேக்கப் வழங்குகிறது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :