Noise ColorFit Pro ஹார்ட் பீட் மற்றும் வாட்டர் ரெசிடண்ட் வசதியுடன் அறிமுகம்.
ஸ்மார்ட் உபகரணங்களை உற்பத்தி செய்வதில் பிரபலமாக அறியப்படும் நாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. கலர்ஃபிட் ப்ரோ 2 என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் கடந்த ஆண்டு நாய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த கலர்ஃபிட் ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
Surveyநாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 சிறப்பம்சங்கள்:
– 1.3 இன்ச் 240×240 பிக்சல் எல்.சி.டி. டச் ஸ்கிரீன்
– ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் பயன்படுத்தும் வசதி
– இதய துடிப்பு ஆரோக்கியத்தை டிராக் செய்யும் வசதி
– உறக்கத்தை டிராக் செய்யும் வசதி
– அழைப்புகள், டெக்ஸ்ட் என அனைத்து ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன்
– எடை: 35 கிராம்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
– ஏழு முதல் பத்து நாட்களுக்கான பேட்டரி
– 45 நாட்கள் ஸ்டான்ட்-பை
புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 மாடலில் 1.3 இன்ச் கலர் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக டைனமிக் வாட்ச் ஃபேஸ்கள் இடம்பெற்றிருக்கின்றன. இத்துடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, மேம்பட்ட பீடோமீட்டர் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் உறக்கம், இதய துடிப்பு ஆர்க்கியம் போன்றவற்றை டிராக் செய்யும் வசதியும் கொண்டிருக்கிறது.
நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இன்று (அக்டோபர் 15) முதல் துவங்குகிறது. ஜெட் பிளாக் தவிர புதிய ஸ்மார்ட்வாட்ச் டீல் கிரீன் மற்றும் மிஸ்ட் கிரே போன்ற நிறங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile