Apple அல்ட்ரா டிசைனுடன் ஸ்டைலான லுக்கில் அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.

Apple அல்ட்ரா டிசைனுடன் ஸ்டைலான லுக்கில் அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.
HIGHLIGHTS

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்று தோற்றமளிக்கும் கிஸ்மோர் புதிய ஸ்மார்ட்வாட்ச் கிஸ்மோர் வோக் அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.95 இன்ச் HD டிஸ்ப்ளேவில் வருகிறது

இதன் விலை ரூ.1,999. இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் இருந்து வாங்கலாம்

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்று தோற்றமளிக்கும் கிஸ்மோர் புதிய ஸ்மார்ட்வாட்ச் கிஸ்மோர் வோக் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு நேர்த்தியான ஸ்மார்ட்வாட்ச். இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.95 இன்ச் HD டிஸ்ப்ளேவில் வருகிறது, அதன் ஸ்க்ரீன் ரெஸலுசன் 320X38 பிக்சல்கள். இது ஒரு சூப்பர் ஸ்டைலிஷ் வாட்ச். இதன் விலை ரூ.1,999. இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் இருந்து வாங்கலாம். மேலும், ஸ்மார்ட்வாட்சை கிஸ்மோர் இணையதளத்தில் இருந்து வாங்கலாம். கடிகாரம் கருப்பு, ஆரஞ்சு மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 

கிஸ்மோர் வோக் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், ஆரஞ்சு மற்றும் வைட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய கிஸ்மோர் வோக் ஸ்மார்ட்வாட்ச் ப்ளிப்கார்ட் மற்றும் கிஸ்மோர் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Gizmore VOGUE சிறப்பம்சம்.

கிஸ்மோர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 'வோக்' ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.95 இன்ச் HD டிஸ்ப்ளே, 91 சதவீதம் ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ, ஸ்ப்லிட் ஸ்கிரீன் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. பிரீமியம் தோற்றம் கொண்ட மெட்டல் கேசிங், சதுரங்க வடிவம் கொண்ட டயல் உள்ளிட்டவை இந்த வாட்ச்-ஐ அழகாக காட்சியளிக்கச் செய்கின்றன.

இதில் உள்ள ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 600 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்டவை அதிகப்படியான சூரிய வெளிச்சங்களிலும் ஸ்கிரீனை சிரமம் இன்றி பார்க்க செய்கிறது. இத்துடன் பயனர்களுக்கு 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்களை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. கிஸ்மோர் வோக் ஸ்மார்ட்வாட்ச் எளிய நேவிகேஷன் வசதியை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo