கம்மி பட்ஜெட்டில் ப்ரீமியம் போனை அறிமுகம் செய்த Lava இதில் டுயல் டிஸ்ப்ளே இருக்கும்

HIGHLIGHTS

Lava இன்று அதன் Lava Virat Curve 5G போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

இந்த போனில் 6000mAh பேட்டரியுடன் வருகிறது

இந்த போனில் இருக்கும் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க

கம்மி பட்ஜெட்டில் ப்ரீமியம் போனை அறிமுகம் செய்த Lava இதில் டுயல் டிஸ்ப்ளே இருக்கும்

Lava இன்று அதன் Lava Virat Curve 5G போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த போன மிகவும் பட்ஜெட் பிரன்ட்லி ஆகும், மேலும் இது 6000mAh பேட்டரியுடன் வருகிறது மேலும் இந்த போன் மிக சிறந்த ப்ரீமியம் லுக் தருகிறது, அதாவது இந்த போனின் பின்புறத்தில் கேமராவுக்கு அருகில் சிறிய டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் இருக்கும் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Lava Virat Curve 5G விலை தகவல்

Lava Virat Curve 5G இந்தியாவில் ஃபிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படும். இது தவிர, இந்த போனை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வாங்கலாம் . இந்த போன் ஹெரிடேஜ் இண்டிகோ, மக்ரானா ஐவரி மற்றும் எல்லோரா ஸ்லேட் ஆகிய மூன்று வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் வீகன் லெதர் ஃபினிஷ் கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 23,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் அடங்கும். அறிமுகச் சலுகையின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மூலம் வாங்கும்போது, ​​இதை ரூ. 19,999 என்ற விலையில் வாங்கலாம். இதன் விற்பனை செப்டம்பர் 28 முதல் தொடங்கும்.

Lava Virat Curve 5G சிறப்பம்சம்

Lava Virat Curve 5G, போனில் மெயின் திரையாக 6.67-இன்ச் 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்தத் போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் ஃபுல்-HD+ ரெசொலூஷனை (2,400 x 1,080 பிக்சல்கள்) கொண்டுள்ளது. இது 1,100 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது . இந்தத் போனின் பின்புறத்திலும் ஒரு டிஸ்ப்ளே உள்ளது. இது பின்புற கேமரா ஐலண்டிற்குள் அமைந்துள்ள ஒரு மினி டிஸ்ப்ளே ஆகும். இது கஸ்டமர்கள் பேட்டரி நிலை, ஒலியளவு, நேரம், ஈமோஜிகள், கஸ்டமைஸ் மெசேஜ்கள் மற்றும் நோட்டிபிகேஷன்களைக் காண்பிக்கும் என்றும், இதன்மூலம் முக்கியமான நோட்டிபிகேஷன்களைப் பார்க்க போனின் ப்ரைம் ஸ்க்ரீனை மீண்டும் மீண்டும் இயக்க வேண்டிய தேவையை நீக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது.

லாவா விராட் கர்வ் 5ஜி, 6nm பர்போமான்ஸ் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7100 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 800,000 Antutu ஸ்கோர் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சிப்புடன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த போன் 6ஜிபி விர்ச்சுவல் ரேமையும் சப்போர்ட் செய்கிறது . இந்த போன் ஆண்ட்ராய்டு 16 உடன் வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு பதிப்பு மேம்படுத்தல்களும், மூன்று ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

லாவா விராட் கர்வ் 5ஜி, 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இதில் சோனி IMX752 முதன்மை சென்சார் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது EIS சப்போர்டுடன் வருகிறது. ஒரு செகண்டரி நிலை கேமராவும் உள்ளது. இந்த ஃபோனால் 30fps வேகத்தில் 2K வீடியோ பதிவு செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 13MP முன்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஐபோனுக்கு டஃப் கொடுக்கும் விலையில் Realme 16 Pro 5G Harry Potter எடிஷன் அறிமுகம் அப்படி என்ன அம்சம் இருக்கு

லாவா விராட் கர்வ் 5ஜி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் ஒரு பெரிய 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், நிறுவனம் 33W சார்ஜரையும் பெட்டியில் சேர்த்துள்ளது. இந்த ஃபோன் சார்ஜ் செய்வதற்கு USB டைப்-சி போர்ட்டை ஆதரிக்கிறது. இது 92 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகி, 55 மணிநேர பேச்சு நேரத்தை வழங்கும் என்று லாவா நிறுவனம் கூறுகிறது.

டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிற்காக இந்நிறுவனம் IP64 ரேட்டிங்கை வழங்கியுள்ளது. மேலும் இது MIL-STD-810H சார்டிபிகட் பெற்றுள்ளது. இந்தத் போனில் 162.26 x 73.51 x 8.55 mm அளவுடையது மற்றும் 184 கிராம் எடை கொண்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile