அக்டோபர் 1 முதல் LPG சிலிண்டரில் இதை கட்டாயம் செய்யவில்லை என்றால் சப்சிடி கிடைக்காது இதை எப்படி செய்வது செய்வது

HIGHLIGHTS

அக்டோபர் 1 முதல் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகார (BAA) நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும்

சப்சிடி பெறும் சமையல் கேஸ் உண்மையான மற்றும் தகுதியுள்ள குடும்பங்களுக்குச் சென்றடைவதை உறுதி

வீட்டு உபயோக கேஸ் கனெக்ஷன்களுக்கான வெரிபிகேஷன் நடைமுறையை வலுப்படுத்தவும்

அக்டோபர் 1 முதல் LPG சிலிண்டரில் இதை கட்டாயம் செய்யவில்லை என்றால் சப்சிடி கிடைக்காது இதை எப்படி செய்வது செய்வது

அரசு சப்சிடியுடன் கூடிய நிர்ணயிக்கப்பட்ட ரீடைலர் விற்பனை விலையில் சமையல் கேஸ் (LPG) சிலிண்டர்களை புக்கிங் செய்ய விரும்பும் வீட்டு உபயோக நுகர்வோர், 2026 அக்டோபர் 1 முதல் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகார (BAA) நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும். சப்சிடி பெறும் சமையல் கேஸ் உண்மையான மற்றும் தகுதியுள்ள குடும்பங்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும், வீட்டு உபயோக கேஸ் கனெக்ஷன்களுக்கான வெரிபிகேஷன் நடைமுறையை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பெட்ரோலியம் மற்றும் நேச்சுரல் கேஸ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பயோமெட்ரிக் அதேண்டிகேஷன் அவசியமா?

பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம், சப்சிடி விலையிலான LPG சிலிண்டர்கள் தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்கிறது. ஒவ்வொரு கனெக்ஷனுக்கும் ஆதார் அதேடிகேஷன் பெற்ற கன்ச்யூமருடன் கனெக்ஷன் , சப்சிடி விலையிலான வீட்டு உபயோக LPG சிலிண்டர்கள் பிஸ்னஸ் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்குத் மாற்று திருப்பப்படுவதைத் தடுக்கவும், காப்பி மற்றும் தகுதியற்ற கனேக்ஷங்களை அகற்றவும், சப்சிடி டெலிவரி செயல்முறையை வெளிப்படையானதாகவும் இலக்கு சார்ந்ததாகவும் மாற்றவும் உதவுகிறது. இந்த செயல்முறையானது, எந்தவொரு உண்மையான மற்றும் தகுதியான குடும்பத்திற்கும் LPG கிடைப்பதைத் தடுக்கும் நோக்கம் கொண்டதல்ல, மேலும் ஒவ்வொரு தகுதியான கச்டமருக்கும் சில எளிய வழிமுறைகள் மூலம் இதை நிறைவு செய்ய முடியும்.

அக்டோபர் 1 முதல் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

  • ஏற்கனவே பயோமெட்ரிக் ஆதார் வெரிபிகேஷன் முடித்த கன்ஸ்யூமர் அதை மீண்டும் செய்யத் தேவையில்லை. அவர்கள் முன்பைப் போலவே எல்பிஜி சிலிண்டர்களைத் தொடர்ந்து பெறுவார்கள்.
  • பயோமெட்ரிக் ஆதார் அதேண்டிகேஷன் முடிக்காத கன்ச்யூமருக்கு, அதேண்டிகேஷன் முடிந்த பிறகு மானியத்துடன் கூடிய ரீஃபில் புக்கிங் தொடங்கும்

பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை எப்படி செய்வது?

  • ரீபில்லிங் டெலிவரின் போது: டெலிவரி செய்பவர் OMC மொபைல் ஆபை பயன்படுத்தி அந்த இடத்திலேயே அதேடிகேஷன் நிறைவு செய்யலாம்.
  • விநியோகஸ்தர் அலுவலகத்தில்: கஸ்டமர் தங்களின் எல்பிஜி விநியோகஸ்தரை நேரில் சந்தித்து, அங்கேயே அங்கீகாரச் சரிபார்ப்பை நிறைவு செய்யலாம்.
  • நிறுவனத்தின் மொபைல் ஆப்யில்யில்: நுகர்வோர் தங்கள் விநியோகஸ்தர் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம், வீட்டில் இருந்தபடியே வசதியாக இந்தச் செயல்முறையைத் தாங்களாகவே செய்து முடிக்கலாம்.
  • இன்டேன் வாடிக்கையாளர்களுக்கான இந்தியன்ஆயில் ஒன் செயலி
  • பாரத் கேஸ் நுகர்வோருக்கான ஹலோபிபிசிஎல் செயலி
  • HP கேஸ் நுகர்வோருக்கான HP PAY ஆப்
  • PMUY போர்ட்டலில், e-KYC-ஐ நீங்களே பூர்த்தி செய்வது எப்படி என்பது குறித்த காணொளிப் பயிற்சிகள் கிடைக்கின்றன.

89.9 சதவீத நுகர்வோர் பயோமெட்ரிக் ஆதார் அதேடிகேஷன் நிறைவு செய்துள்ளனர்.

செப்டம்பர் 19, 2026 நிலவரப்படி, 274.3 மில்லியன் செயலில் உள்ள உள்நாட்டு எல்பிஜி நுகர்வோர் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை நிறைவு செய்துள்ளனர், இது 89.9% உள்ளடக்கத்தைக் குறிக்கிறது. நுகர்வோர் ஆரம்பத்தில் ஜூன் 30, 2026-க்குள் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை நிறைவு செய்ய வேண்டியிருந்தது. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்குவதற்காக, காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது – ஜூலை 31, ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 15, ஆகஸ்ட் 23, ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7, மற்றும் இறுதியாக செப்டம்பர் 14, 2026 வரை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile