வேற லெவல் boAt ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் 100க்கும் அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட் மற்றும் 1.83 டிஸ்ப்ளே

HIGHLIGHTS

boAt இந்தியாவில் அதன் புதிய Storm Infinity ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்தது

இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.83-இன்ச் கொண்ட டிஸ்ப்ளே உடன் 100+ ஸ்போர்ட்ஸ் மோட் வழங்குகிறது

இதில் Bluetooth காலிங், ஹெல்த் ட்ரேகிங் மற்றும் ASAP சார்ஜிங் போன்ற ப்ரீமியம் அம்சம் கொண்டுள்ளது

வேற லெவல் boAt ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் 100க்கும் அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட் மற்றும் 1.83 டிஸ்ப்ளே

boAt இந்தியாவில் அதன் புதிய Storm Infinity ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்தது இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.83-இன்ச் கொண்ட டிஸ்ப்ளே உடன் 100+ ஸ்போர்ட்ஸ் மோட் வழங்குகிறது மற்றும் இதில் SOS போன்ற மிக சிறந்த அம்சம் கொண்டுள்ளது. மேலும் இதில் Bluetooth காலிங், ஹெல்த் ட்ரேகிங் மற்றும் ASAP சார்ஜிங் போன்ற ப்ரீமியம் அம்சம் கொண்டுள்ளது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

boAt Storm Infinity விலை தகவல்

boAt Storm Infinity இந்தியாவில் 1,299ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது, இது Amazon, Flipkart மற்றும் boAt யின் அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் வாங்கலாம். இதை தவிர இந்த ஸ்மார்ட்watch Active Black, Brown, Cherry Blossom, Deep Blue, Jade Gold, Silver Mist, Sports Black மற்றும் Sports Green கலரில் வாங்கலாம்

boAt Storm Infinity சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே:boAt ஸ்மார்ட்வாட்ச் 1.83-இன்ச் HD டிஸ்ப்ளேவை 550 nits பிரகாசம், 240×284 தெளிவுத்திறன் மற்றும் வேக் கெஸ்ச்சர் அம்சத்துடன் கொண்டுள்ளது.

பேட்டரி : boAt Storm Infinity யின் 550mAh பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இது 15+ நாட்கள் வரை இதன் பேட்டரி நீடிக்கும் இதில் ASAP பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது, மேலும் இது 60 நிமிடங்களில் 100% வரை சார்ஜ் செய்யலாம்

புளூடூத்: இந்த ஸ்மார்ட்வாட்ச் புளூடூத் வழியாக கனெக்டிவிட்டி மற்றும் மேம்பட்ட புளூடூத் காலிங் அம்சத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு இண்டேரக்டிவ் டயல் பேடைக் கொண்டுள்ளது மற்றும் 10 உள் தொடர்புகளை சேமிக்க முடியும், எனவே நீங்கள் ஒரு தட்டினால் கால்களை செய்யலாம்.

மற்ற அம்சங்கள்: IP68 ரேட்டிங் ஸ்மார்ட்வாட்சை டஸ்ட் , வியர்வை மற்றும் வாட்டர் ஸ்பெலஷிளிருந்து பாதுகாக்கிறது. தொலைந்து போன ஸ்மார்ட்வாட்சை எளிதாகக் கண்டுபிடிக்க, அவசரகால SOS எச்சரிக்கை அமைப்பு, செயல்பாட்டு கிரவுன் UI மூலம் Find My Device அம்சத்திற்குச் செல்லலாம். உள்ளமைக்கப்பட்ட வொயிஸ் அசிஸ்டன்ட் , நோட்டிபிகேசன் எச்சரிக்கை மற்றும் விரைவான பதிலுக்கான சப்போர்ட் வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், அலாரம், ஸ்டாப்வாட்ச், வானிலை புதுப்பிப்பு, டார்ச்லைட், இசை மற்றும் கேமரா கட்டுப்பாடு ஆகியவையும் உள்ளன.

ஹெல்த் அம்சங்கள்: ஸ்மார்ட்வாட்சில் இதய துடிப்பு மற்றும் SpO2 சென்சார்கள், தூக்கம் மற்றும் மன அழுத்த கண்காணிப்பு, மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு, வழிகாட்டப்பட்ட சுவாசப் பயிற்சிகள், 100+ ஸ்போர்ட்ஸ் மோட் , படி கவுண்டர் மற்றும் கலோரி எரிப்பு கண்காணிப்பு ஆகியவை உள்ளன. இது தவிர, உட்கார்ந்த நிலை எச்சரிக்கை மற்றும் தண்ணீர் குடிக்கும் நினைவூட்டல் வசதியும் உள்ளது.

இதையும் படிங்க itel யின் புதிய AMOLED ஆல்வேஸ் டிஸ்பிளே ஒன் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo