Amazfit யின் புதிய GTR 4 ஸ்மார்ட்வாட்ச் ரூ. 16,999 விலையில் அறிமுகம்.

Updated on 16-Sep-2022
HIGHLIGHTS

அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய GTR 4 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய அமேஸ்பிட் GTR 4 மாடலில் அட்வான்ஸ்டு டிராக் ரன் மோட், புதிய கொல்ப் ஸ்விங் மோட், அடிடாஸ் ரன்னிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது

இந்தியாவில் இதன் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய GTR 4 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த ஸ்மார்ட்வாட்ச் IFA சர்வதேச நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் மேம்பட்ட ஜிபிஎஸ் பொசிஷனிங், 150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் காலிங் வசதி மற்றும் ஸ்டாண்ட்-அலோன் மியூசிக் பிளேபேக் வசதி கொண்டிருக்கிறது.

இத்துடன் புதிய அமேஸ்பிட் GTR 4 மாடலில் அட்வான்ஸ்டு டிராக் ரன் மோட், புதிய கொல்ப் ஸ்விங் மோட், அடிடாஸ் ரன்னிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஸ்டார்வா சேவைக்கான சப்போர்ட் அப்டேட் மூலம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதே போன்று செப் ஆப் மூலம் வழித்தடங்களை இம்போர்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் பயோடிராக்கர் 4.0 PPG ஆப்டிக்கல் சென்சார், ஐந்து செயற்கைக்கோள் சிஸ்டம்களுடன் இணைந்து செயல்படும் ஆற்றல் மிக்க மேம்பட்ட ஜிபிஎஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், மேம்பட்ட பிட்னஸ் அம்சங்கள் மற்றும் செப் ஆப் மூலம் கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் AMOLED ஸ்கிரீன், அதிகபட்சம் 14 நாட்களுக்கான பேட்டரி லைஃப், பில்ட் இன் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் சூப்பர்ஸ்பீடு பிளாக் மற்றும் விண்டேஜ் பிரவுன் லெதர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :