ட்விட்டரில் ப்ளூ டிக் வெரிஃபிகேஷனுக்கு காசு தேவை இல்லை ஆனால் இதை செய்யணும்.

HIGHLIGHTS

எலான் மஸ்க்-இன் சமூக வலைதளமான ட்விட்டர், சில வெரிபைடு அக்கவுண்ட்களுக்கு "Official" லேபல் அறிமுகம் செய்ய இருக்கிறது.

. ட்விட்டரில் எட்டு டாலர்கள் சந்தா முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெரிபை செய்யப்பட்டு புளூ டிக் பெற்று இருக்கும் அக்கவுண்ட்களுக்கு புதிய "Official" லேபெல் வழங்கப்படாது.

எலான் மஸ்க்-இன் சமூக வலைதளமான ட்விட்டர், சில வெரிபைடு அக்கவுண்ட்களுக்கு "Official" லேபல் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் அடங்கும். இந்த வழிமுறை புதிய 8 டாலர்கள் சந்தா முறை அமலுக்கு வரும் போது பயன்பாட்டுக்கு வரும். ட்விட்டரில் எட்டு டாலர்கள் சந்தா முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக வெரிபை செய்யப்பட்டு புளூ டிக் பெற்று இருக்கும் அக்கவுண்ட்களுக்கு புதிய "Official" லேபெல் வழங்கப்படாது. எனினும், இதனை பணம் கொடுத்து வாங்கிட முடியாது. இந்த லேபெல் முதன்மையாக அரசாங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், வியாபாரங்கள், முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் சில பொது நபர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட இருக்கிறது.

ட்விட்டர் நிறுவனத்தின் பிராடக்ட் பிரிவு அதிகாரி எஸ்தர் கிராஃபோர்டு ட்விட்டர் புளூ சந்தா முறையில் ஏராளமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதன்படி புதிய ட்விட்டர் புளூ சந்தா முறை பயனர்களுக்கு வெரிபைடு புளூ டிக் வழங்கும். இவ்வாறு வழங்கும் போது எந்த விதமான சோதனையும் மேற்கொள்ளப்படாது. இந்த வழிமுறைக்கு பலரும் எதிர்ப்பு மற்றும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்

https://twitter.com/esthercrawford/status/1590109344976470016?ref_src=twsrc%5Etfw

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :