Xiaomi யின் அசத்தலான Redmi Smart TV Fire OS 7 உடன் விரைவில் வரும்.

HIGHLIGHTS

சியோமியின் அதன் துணை பிராண்டான ரெட்மியின் புதிய ஸ்மார்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புதிய ஸ்மார்ட் டிவி ஃபயர் ஒஎஸ் கொண்டிருக்கும் என சியோமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Xiaomi  யின் அசத்தலான Redmi Smart TV Fire OS 7 உடன் விரைவில் வரும்.

சியோமியின் அதன் துணை பிராண்டான ரெட்மியின் புதிய ஸ்மார்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நிறுவனம் ஸ்மார்ட் டிவி அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் டீசரை அந்நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த டிவி அமேசானில் அறிமுகப்படுத்தப்படும். இ-காமர்ஸ் தளத்தின் பட்டியலிலும் டிவியின் சில விவரக்குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த டிவியில் நிறுவனம் என்ன சிறப்பு அம்சங்கள் மற்றும் வடிவமைப்பை அறிமுகப்படுத்தப் போகிறது என்பதை நாங்கள் உங்களுக்கு கூறுவோம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய ஸ்மார்ட் டிவி ஃபயர் ஒஎஸ் கொண்டிருக்கும் என சியோமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், ஸ்மார்ட் டிவி டீசரின் படி புதிய மாடல் ஃபயர் ஒஎஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. சியோமியின் புதிய ஸ்மார்ட் டிவி அமேசான் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஃபயர் ஒஎஸ் டிவியை அறிமுகம் செய்தன் மூலம் சியோமி நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய அதிக ஆப்ஷன்களை வழங்க இருக்கிறது. ஏற்கனவே ஒனிடா, க்ரோமா, AKAI மற்றும் அமேசான் டிவிக்களில் ஃபயர் ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.

டீசரின் படி ஸ்மார்ட் டிவி-யின் யுஐ அமேசான் ஃபயர் ஸ்டிக் மற்றும் ஃபயர் ஸ்டிக் 4K-இல் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இவைதவிர புதிய ஸ்மார்ட் டிவி பற்றி சியோமி எந்த தகவலும் வழங்கவில்லை. வரும் நாட்களில் இதுபற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் மற்றொரு டீசரில் புதிய ஸ்மார்ட் டிவி மெல்லிய பெசல்கள், அதிக ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo