Vu Cinema TV Action சீரிஸ் ஸ்மார்ட்டிவி 100W ஸ்பீக்கருடன் அறிமுகம்.

Updated on 21-Jan-2021
HIGHLIGHTS

Vu தனதுCinema TV Action சீரிஸின் புதிய ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

VU ந்திய சந்தையில் 55 எல்எக்ஸ் மற்றும் 65 எல்எக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன,

Vu தனதுCinema TV Action  சீரிஸின்  புதிய ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Vu இந்த சமீபத்திய ஸ்மார்ட் டிவியை இரண்டு 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் ஆக்ஷ்ன் சீரிஸ் வு சினிமா டிவி சீரிஸின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இந்த இரண்டு Action  சீரிஸின் ஸ்மார்ட் டிவிகளும் இந்திய சந்தையில் 55 எல்எக்ஸ் மற்றும் 65 எல்எக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, அவற்றை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் வாங்கலாம். வு சினிமா டிவி Action  சீரிஸின் ஸ்மார்ட் டிவிகளில் பல பிரீமியம் அம்சங்கள் உள்ளன. இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் ஜேபிஎல் ஆடியோ மற்றும் பிக்செலியம் தொழில்நுட்பத்துடன் வருகின்றன.

இரு டிவி மாடல்களில் 4K UHD டிஸ்ப்ளே மற்றும் ஹெச்டிஆர்10, டால்பி விஷன் மற்றும் MEMC வசதி வழங்கப்பட்டு உள்ளன.

இரண்டு வு டிவி மாடல்களிலும் 100 வாட் சவுண்ட்பார் மற்றும் 6 ஜெபிஎல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவை டைட்டானியம் கிரே டோன் மற்றும் பெசல்-லெஸ் ஸ்கிரீன், பேப்ரிக் பினிஷ் கொண்டிருக்கிறது. 

இத்துடன் ஐஆர் பிளஸ் ப்ளூடூத் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. இந்த ரிமோட் யூடியூப், நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் மற்றும் கூகுள் பிளே சேவைகளுக்கான ஹாட்கீ வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சரவுண்ட் சவுண்ட், டால்பி ஆடியோ மற்றும் ஸ்போர்ட்ஸ் சவுண்ட் மோட் வசதிகளை கொண்டுள்ளது.

வு சினிமா டிவி ஆக்ஷன் 55 இன்ச் மாடல் விலை ரூ. 49,999 என்றும் 65 இன்ச் வேரியண்ட் விலை ரூ. 69,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு டிவி மாடல்களும் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :