Sony பிரியர்களுக்கு Bravia 9 II மற்றும் Bravia 7 II TV அறிமுகம், பவர்புல் XR பிராசஸர் கொண்டிருக்கும்

HIGHLIGHTS

Sony இந்தியாவில் அதன் Bravia 9 II மற்றும் Bravia 7 II டிவி இந்தியாவில் அறிமுகம் செய்தது.

Sony Bravia 9 II மாடலானது 55, 65, 75 மற்றும் 85 அங்குலத் ஸ்க்ரீன் சைஸ்களில் கிடைக்கிறது

சோனியின் காக்னிட்டிவ் பிராசஸர் XR-யில் இயங்குவதோடு, LED கண்ட்ரோல் கொண்டுள்ளன

Sony இந்தியாவில் அதன் Bravia 9 II மற்றும் Bravia 7 II டிவி இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள், சோனியின் சொந்த ‘True RGB’ டிஸ்ப்ளே தொழில்நுட்பம் மற்றும் ‘RGB Backlight Master Drive Pro’ ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளன. Sony Bravia 9 II மாடலானது 55, 65, 75 மற்றும் 85 அங்குலத் திரை சைஸ்களில் கிடைக்கிறது; அதேவேளையில், Sony Bravia 7 II மாடலானது 75 மற்றும் 85 இன்ச் ஸ்க்ரீன் விருப்பங்களில் கிடைக்கிறது. சோனியின் காக்னிட்டிவ் பிராசஸர் XR-யில் இயங்குவதோடு, LED கண்ட்ரோல் கொண்டுள்ளன மேலும் விலை அம்சங்கள் மற்றும் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க..

Sony Bravia 9 II, Bravia 7 II smart TV விலை தகவல்.

சோனி பிராவியா 9 II 75-இன்ச் ஸ்க்ரீன் மாடலின் விலை ரூ. 8,39,900 ஆகவும், 85-இன்ச் மாடலின் விலை ரூ. 9,89,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்களின் விற்பனை ஜூன் 29 அன்று தொடங்கும். புதிய வரிசைகள் சோனி ரீடைளர் விற்பனைக் கடைகள் மூலம் வாங்கலாம்.

சோனி பிராவியா 7II ஸ்மார்ட் டிவியின் 55-இன்ச் ஸ்க்ரீன் கொண்ட அடிப்படை மாடலின் விலை இந்தியாவில் ரூ. 3,59,900 ஆகும். 65-இன்ச் மாடலின் விலை ரூ. 4,39,900 ஆகவும், 75-இன்ச் மாடலின் விலை ரூ. 6,19,900 ஆகவும், 85-இன்ச் மாடலின் விலை ரூ. 7,19,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்நிறுவனம், இந்த மாத தொடக்கத்தில் 55 -இன்ச் மற்றும் 65-இன்ச் சோனி பிராவியா 7 II மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது .

Sony Bravia 9 II, Bravia 7 II smart TV சிறப்பம்சம்

சோனி பிராவியா 9 II ஆனது 75-இன்ச் மற்றும் 85-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் களில் வழங்கப்படுகிறது, மேலும் பிராவியா 7 II ஆனது 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் மற்றும் 85-இன்ச் என நான்கு சைஸ்களில் வருகிறது. இந்த இரண்டு வரிசைகளிலும் RGB LED பெக்ரவுந்து மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் கூடிய 4K (2,160×3,840 பிக்சல்கள்) LCD பேனல் இடம்பெற்றுள்ளது.

இந்த இரண்டும் சோனியின் XR பிராசஸருடன் வருகின்றன, மேலும் சிவப்பு, பச்சை மற்றும் ப்ளூ லைட் க்ளர்களை கட்டுப்படுத்தி கலர் அளவை வழங்குவதாகக் கூறப்படும் RGB பேக்லைட் மாஸ்டர் டிரைவ் ப்ரோ தொழில்நுட்பத்தையும் வழங்குகின்றன. இந்த இரண்டும் XR கிளியர் இமேஜ் மற்றும் XR மோஷன் கிளாரிட்டி போன்ற தொழில்நுட்பங்களையும் கன்டென்ட் . மேலும், அப்டேட் செய்யப்பட்ட கலர் ரேஞ்சிர்க்காக சோனியின் RGB டிரைலுமினோஸ் மேக்ஸ் தொழில்நுட்பத்தையும் அவை வழங்குகின்றன.

சோனி பிராவியா 9 II மற்றும் பிராவியா 7 II ஆகிய இரண்டுமே ஆண்ட்ராய்டு டிவி அடிப்படையிலான கூகுள் டிவியில் இயங்குகின்றன, மேலும் கூகுள் அசிஸ்டன்ட் வழியாகக் வொயிஸ் கமன்ட்களை சப்போர்ட் செய்கிகிறன . அவை ஆப்பிள் ஏர்பிளேவுடனும் இணக்கமானவை மற்றும் கூகுள் குரோம்காஸ்ட்டையும் வழங்குகின்றன. அப்டேட் செய்யப்பட்ட பேக்ரவுண்ட் கண்ட்ரோல் வழங்குவதற்காக, இந்தப் புதிய மாடல்களில் புதிதாக உருவாக்கப்பட்ட LED கன்ட்ரோலர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சோனி கூறுகிறது. அவை அதிக பிரகாசத்தை வழங்குவதற்காக RGP டிரைலுமினோஸ் மேக்ஸை வழங்குகின்றன.

சோனி பிராவியா 9 II மற்றும் பிராவியா 7 II ஆகியவை HDR10, HLG, IMAX Enhanced மற்றும் டால்பி விஷன் ஆகியவற்றை ஆதரிக்கின்றன. இந்த டிவிகளில் X-Wide Angle Pro அம்சமும் உள்ளது. பிரீமியம் சோனி பிராவியா 9 II சீரிஸ், குறைந்த பிரதிபலிப்பு மற்றும் கண்ணை கூசும் ஒளிக்காக Immersive Black Screen Pro தொழில்நுட்பத்தை வழங்குகிறது. மேலும், இதில் Luminance Booster Pro மற்றும் XR Contrast Booster 40 ஆகியவை அடங்கும், அதேசமயம் பிராவியா 7 II ஆனது Luminance Booster மற்றும் XR Contrast Booster 20-ஐப் பயன்படுத்துகிறது.

இதையும் படிங்க ஜாக் பாட் ஆஃபர் இப்படி ஆபர் இருந்தால் கிட்சன்லையும் டிவி வச்சுக்கலாம் QLED TV வெறும் ரூ,7,260 யில் ஆரம்பம்

ஆடியோவைப் பொறுத்தவரை, சோனி பிராவியா 9 II ஆனது எட்டு ஸ்பீக்கர் யூனிட்களுடன் கூடிய 80W அக்யூஸ்டிக் மல்டி-ஆடியோ+ சிஸ்டத்தைக் கொண்டுள்ளது, அதே சமயம் சோனி பிராவியா 7II ஆனது நான்கு ஸ்பீக்கர்களைக் கொண்ட அக்யூஸ்டிக் மல்டி-ஆடியோ சிஸ்டம் மூலம் 40W ஆடியோ அவுட்புட்டை வழங்குகிறது. இந்த இரண்டு வரிசை மாடல்களும் Dolby Atmos, Dolby Audio, DTS, அக்யூஸ்டிக் சென்டர் சிங்க் மற்றும் 360 ஸ்பேஷியல் சவுண்ட் பெர்சனலைசர் ஆகியவற்றை சப்போர்ட் செய்கின்றன.

சோனி பிராவியா 9 II, அலுமினிய கருப்பு பெசல் மற்றும் கிளாஸ் போன்ற பளபளப்பான ஸ்டாண்டுடன் ஒரு பிரீமியம் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. கேமர்களுக்காக, சோனி பிராவியா 9 II மற்றும் பிராவியா 7 II ஆகியவை பிளேஸ்டேஷன் 5-க்கு ஆட்டோ HDR டோன் மேப்பிங் மற்றும் ஆட்டோ ஜானர் பிக்சர் மோடு ஆகியவற்றை வழங்குகின்றன. அவற்றில் நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் சோனி பிக்சர்ஸ் கோர் ஆகியவற்றுக்கான ஸ்டுடியோ காலிப்ரேட்டட் மோடுகள் உள்ளன. இரண்டு மாடல்களும் ஒரு ஸ்டேண்டர்ட் வாய்ஸ் ரிமோட்டுடன் வருகின்றன.

சோனி பிராவியா 9 II மற்றும் பிராவியா 7 II ஆகிய இரண்டுமே வைஃபை 6, ப்ளூடூத் 5.3, நான்கு HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், ஒரு ஈதர்நெட் போர்ட், RF மற்றும் சாட்டிலைட் உள்ளீடுகளைக் கொண்டுள்ளன. அவை வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (VRR) மற்றும் ஆட்டோ லோ லேட்டன்சி மோடு (ALLM) போன்ற அம்சங்களை சப்போர்ட் செய்கின்றது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :