Samsung யின் புதிய போன் அறிமுகத்திற்க்கு தயார் ரூ,20,000க்கும் கம்மி விலையில் இருக்கும்

HIGHLIGHTS

Samsung இந்தியாவில் அதன் புதிய Samsung Galaxy F70 5G போனை அறிமுகம் செய்ய இருக்கிறது

இந்த போனில் 50MP மெயின் கேமரா மற்றும் இதனுடன் ஒப்டிக்கல் இமேஜ் ஸ்டேப்லைசெஷன் சப்போர்டுடன் வருகிறது

இதன் அறிமுக தேதி மற்றும் பல விவரங்கள் பார்க்கலாம் வாங்க.

Samsung இந்தியாவில் அதன் புதிய Samsung Galaxy F70 5G போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் இந்த போனில் 50MP மெயின் கேமரா மற்றும் இதனுடன் இதில் ஒப்டிக்கல் இமேஜ் ஸ்டேப்லைசெஷன் சப்போர்டுடன் வருகிறது. மேலும் இந்த போனில் Google Gemini மற்றும் Circle to Search அம்சங்களுடன் வருகிறது.மேலும் இந்த போனை இந்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது மேலும் இதன் அறிமுக தேதி மற்றும் பல விவரங்கள் பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy F70 5G அறிமுக தேதி மற்றும் விலை தகவல்

Samsung யின் அதன் புதிய Galaxy F70 5G போனை அக்டோபர் 18 அன்று ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்ய இருக்கிறது இந்த போனின் டீசர் Flipkart மற்றும் அதிகாரபூர்வ வெப்சைட் பார்க்கலாம் மேலும் இந்த போனின் விலை ரூ,20,000க்கும் குறைவாக இருக்கும் என டீஸ் செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் இந்த போனின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை, மேலும் இந்த போன் Bold Black மற்றும் Vivid Violet ஆகிய கலரில் வாங்கலாம்.

Samsung Galaxy F70 5G எதிர்ப்பர்க்கபடும் அம்சம் என்ன

Samsung Galaxy F70 5G போனில் , 6.7-இன்ச் FHD+ AMOLED ஸ்க்ரீனை கொண்டிருக்கும். இந்தத் ஸ்க்ரீன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது . மேலும், இந்த ஃபோனின் திரை கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 மூலம் பாதுகாக்கப்படும். வடிவமைப்பைப் பொறுத்தவரை, இந்த ஃபோன் ஒரு ப்ளேட்டான ஃபிரேம் மற்றும் வாட்டர்டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் தடிமன் சுமார் 7.5 மிமீ இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி F70 5G, 5G இணைப்பை ஆதரிக்கும் சிப்செட்டான, நிறுவனத்தின் எக்ஸினோஸ் 1330 பிராசஸரால் இயக்கப்படும்.

Samsung Galaxy F70 5G மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இதில் OIS சப்போர்டுடன் கூடிய 50MP ப்ரைமரி கேமரா அடங்கும். கூடுதலாக, இந்த ஃபோனில் 5MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமராவும் இடம்பெறும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக, இதில் 13MP முன்புற கேமரா இருக்கும்.

இதையும் படிங்க:7000 mAh பேட்டரி கொண்ட MOTOROLA யின் இந்த மாடலை வாங்கலாம் ரூ,15000க்கும் கம்மி விலையில்

பேட்டரியைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி F70 5G ஆனது 5000mAh பேட்டரியுடன் வரும். இந்த போன் 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். சாம்சங் கேலக்ஸி F70 5G-யில் கூகுள் ஜெமினி மற்றும் சர்க்கிள் டு சர்ச் போன்ற அம்சங்களும் இருக்கும். சாம்சங் வாலட் மூலம் ‘டேப் அண்ட் பே’ வசதியும் இந்த போனில் இருக்கும். இது தவிர, சாம்சங் நாக்ஸ் செக்யூரிட்டி மற்றும் குயிக் ஷேர் போன்ற அம்சங்களும் வழங்கப்படும். வாய்ஸ் ஃபோகஸ் அம்சம், கால்களின் போது சுற்றுப்புற நோயசை குறைக்க உதவும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :